தேமுதிகவுடன் கூட்டணி பேசவில்லை.. நைனார் நாகேந்திரன் பேட்டி

கோவையில் உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவிலில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ,தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் வழிபாடு நடத்தினர். பின்னர் நயினார் நகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் இந்தியா பல ஆண்டுகளுக்கு முன்னர் முகலாய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டது.அப்பொழுது பல்வேறு கொடுமைகள் அனுபவிக்கப்பட்டது.மத மாற்றங்கள் செய்யப்பட்டது.இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டது.மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வரை படையெடுப்பு நடந்தது. சோமநாதபுரம்…

Read More

கோவையில் காரில் தீப்பிடித்து உடல் கருகி வாலிபர் சாவு

கோவை குளத்து பாளையம் பகுதியை சேர்ந்தவர் விமல் . 22 வயதான தனியார் நிறுவன இவர் நேற்று இரவு தனது நண்பர்கள் இரண்டு பேருடன் காளியாபுரத்திலிருந்து திருமலையாம்பாளையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரோட்டோரத்தில் பெட்ரோல் குழாய் பதிக்கும் பணி நடந்து வந்தது இதற்காக குழாய்களை ரோட்டோரம் வைத்திருந்தனர். எதிர்பாரா விதமாக அந்த குழாய் மீது கார் மோதியது . இதில் கார் உடனடியாக தீப்பிடித்தது. காரில் இருந்த இரண்டு பேர் உடனடியாக இறங்கி விட்டனர்….

Read More

திமுக மறுபடியும் ஜெயிக்குமா.. மகளிர் குழு சர்வே

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழுவினருக்காக தமிழக அரசின் நலத்திட்டங்களில் மக்களை கவர்ந்தது எது என்பது தொடர்பான கணக்கெடுப்பு பணிகள் விரைவில் நடக்க உள்ளது. இதற்கான கணக்கெடுப்பு செயலி பயன்படுத்தும் முறை தொடர்பான பயிற்சி வகுப்பு இன்று நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் குழு பெண்களுக்கு வீடு வீடாக சென்று எப்படி கேள்வி கேட்பது என்ன மாதிரி திட்டங்கள் தொடர்பான தகவல்களை சேகரிப்பது என்பது தொடர்பான பயிற்சி விளக்கம் வழங்கப்பட்டது. தமிழக…

Read More

பறவையே எங்கு இருக்கிறாய். ..

உள்நாட்டுப் பறவைகள் மற்றும் வலசை வரும் பறவைகள் என இரண்டிற்கும் தமிழ்நாடு ஒரு முக்கியமான பல்லுயிர் மையமாக இருப்பதால் தமிழ்நாட்டில் பறவைகள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு என்பது மிக முக்கியமான பணியாக உள்ளது. தமிழ்நாடு அரசு பல்வேறு முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இருவாட்சிப் பறவைகள் (Hornbill) பாதுகாப்பு மையம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், உயர்நிலை வனஉயிரின பாதுகாப்பு நிறுவனத்தில் (AIWC) உள்ள வேட்டையாடும் பறவைகள் (Raptor) ஆராய்ச்சி நிறுவனம். சர்வதேச பறவைகள் பாதுகாப்பு மையம்,…

Read More

SIR தேதி மேலும் நீட்டிப்பு..

தமிழகத்தில் எஸ் ஐ ஆர் என்ற வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகள் நடக்கிறது. இதில் பல மாவட்டங்களில் பணிகள் முடியவில்லை. ஏற்கனவே கடந்த நாலாம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு பின்னர் இன்றுவரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது. ‌ இருப்பினும் பணிகள் முடியவில்லை. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் வரும் 14ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது. வரும் 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதற்கான உத்தரவை தேர்தல் கமிஷன் பிறப்பித்துள்ளது.

Read More

பெத்து எடுத்தவ தத்து கொடுத்துப்புட்டா..

கோவை அரசு மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி பிறந்த ஆண் குழந்தை ஒன்று அனாதையாக விடப்பட்டது. இந்த குழந்தையை பெற்ற தாய் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் மருத்துவமனையில் இருந்து மாயமாகி விட்டார்‌. ரேஸ் கோர்ஸ் போலீசில் புகார் தெரிவித்து குழந்தையின் தாயை தேடும் பணி நடந்தது. ஆனால் பெத்து எடுத்த தாய் குழந்தையை தேடி வரவில்லை. காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட இந்த குழந்தைக்கு வினித் என பெயர் வைத்தனர். சொந்தத் தாய் வராத நிலையில் குழந்தைகள்…

Read More

மனைவியை கொலை செய்து ‘வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்’ வைத்த கணவர் கைது..

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீ பிரியா (30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் (32) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஸ்ரீபிரியா திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து வேலை தேடி கோவை வந்தார். கோவையில் தனியார் நிறுவனத்தில் இவர் ஊழியராக வேலை செய்து வந்தார். காந்திபுரம் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் ஸ்ரீபிரியாவுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் கள்ள…

Read More