Tamil Nilam app: நத்தம் ரயத்துவாரி நிலம் எங்கே…

தமிழக நில அளவை மற்றும் நிலவரித்திட்ட துறை மூலமாக www.tnlandsurvey.tn.gov.in என்ற இணையதளத்தை தேசிய தகவல் மையம் மூலம் உருவாக்கியுள்ளது. அதில், பட்டா மாறுதலுக்கான – தமிழ் நிலம் செல்போன் செயலி இந்த இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதல் செய்வதற்கான விண்ணப்பிக்க ஏதுவான https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. உட்பிரிவு மற்றும் உட்பிரிவில்லாத பட்டா மாறுதல் கோரி வரும் விண்ணப்பங்களை உடனுக்குடன் செயல்படுத்த, தமிழ்நிலம் (ஊரகம்), மற்றும் தமிழ்நிலம் (நகரம்) மென்பொருள்கள் உருவாக்கப்பட்டது….

Read More

பத்திரம் பதிவு செய்யாமல் நீண்ட காலம் பெண்டிங் இருந்தால் சஸ்பெண்ட் நடவடிக்கை…

தமிழக பத்திரப்பதிவு துறை ஐஜி தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரப்பதிவு டிஐஜி மற்றும் மாவட்ட பதிவாளர்கள் சார்பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள அதிரடி சுற்றறிக்கை; பதிவுத்துறை பணியாளர்கள் மீது பெறப்படும் புகார்/கையூட்டுப் புகார் மனுக்களை வகை (1), வகை (II), வகை (III) & வகை (TV) வகைப்படுத்தி, புகார் மனுவின் வகைக்கு ஏற்றாற்போல் புகார் மனுவின் மீது (நேரடியாக) இரகசிய விசாரணை மேற்கொள்ளப்படும். புகார் மனு குறித்து ஆதார ஆவணங்கள் மற்றும் வாக்குமூல நகல்களுடன் முழுவிபர விசாரணை பதிவுத்துறைத்தலைவருக்கு…

Read More

டாஸ்மாக்கில் மட்டமான சரக்கு… எப்எல் 2 பாரில் பேமஸ் பிராண்ட்…

தமிழகத்தில் 4048 டாஸ்மாக் கடைகள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எப்எல்2 எப்எல்3 மற்றும் பல்வேறு வகையான உரிமம் பெற்ற தனியார் பார்கள் செயல்படுகிறது. தினமும் சுமார் 1 கோடி பேர் மதுபானம் வாங்கி பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதமாகியும் இதுவரை டாஸ்மாக் நிர்வாகத்தில் தவறுகளை தடுக்க கூடிய, நிர்வாக ரீதியான மாற்றங்கள் கொண்டு வரப்படவில்லை. டாஸ்மாக் கடைகளில் இட நெருக்கடி, பாட்டில் வைப்பதில் பிரச்னை, காலாவதியான மதுபாட்டில்கள் குவிந்து கிடக்கிறது….

Read More

வெள்ளலூரில் அகழ்வாராய்ச்சி: பழங்கால பொருட்கள் சேகரிப்பு…

தொல்லியல் துறை சார்பில் கோவை வெள்ளலூர் உள்பட 8 இடங்களில் அகழாய்வு செய்ய ஒன்றிய தொல்லியல் துறை அனுமதி வழங்கியது. அகழாய்வின் போது கண்டெக்கப்படும் தொல்பொருட்கள் மற்றும் முக்கிய கலைப்பொருட்களின் பட்டியலை டெல்லியில் உள்ள ஒன்றிய தொல்லியல் துறை இயக்குனரகத்திற்கு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோவை வெள்ளலூர் பகுதியில் அகழாய்வு பணி நடந்து வருகிறது. இந்த வெள்ளலூர் பகுதி சங்க இலக்கியங்களில் பாடப்பெற்ற மற்றும் நொய்யல் நதிக்கரையோம் அமைந்துள்ள பழமையான…

Read More

கோவையில் பணம் கேட்டு 2 வாலிபர்களை கடத்திய ‘போலீஸ் கேங்க் கைது…!

கோவை போத்தனூர் அடுத்த சித்தன்புரம், இந்திரா நகரை நவீன் (29). இவர், வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கிருந்து ஆன்லைன் டிரேடிங் செய்து வந்தார். கடந்த 8ம் தேதி மதியம், நவீனின் அக்கா பரமேஸ்வரியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், “உன் தம்பி நவீனை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம். அவர் உயிரோடு வேண்டும் என்றால் உடனடியாக ரூ.50 லட்சம் பணம் தர வேண்டும்” என்று கூறிவிட்டு இணைப்பை…

Read More

Mins violation: கோவை மாவட்டத்தில் 11 கல் குவாரிகளுக்கு நோட்டீஸ்…!

கோவை மாவட்டத்தில் 161 கல் குவாரிகள் இருக்கிறது. புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர், மாவட்ட அளவில் கல் குவாரிகளில் விதிமுறை மீறல் கண்டறிய டிரோன் சர்வே நடத்த உத்தரவிடப்பட்டது. கடந்த காலங்களில் தோண்டி எடுக்கப்பட்ட கனிம பொருட்களின் அளவு, கல் குவாரிகளின் பரப்பு, அரசுக்கு முறையாக செலுத்திய ராயல்டி, பசுமை வரி குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. முறைகேடு செய்த கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கல் குவாரிகள் உரிமம் இன்றி செயல்பட்டால் அதனை மூடி…

Read More

கோயில் முறைகேடு தொடர்பாக விரைவில் நடவடிக்கை :இந்து சமய அறநிலை துறை அமைச்சர் தகவல்

கோவை விமான நிலையத்தில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: ஆன்லைன் தரிசன டிக்கெட்களை முறையாக வழங்குவது குறித்து ஆய்வு நடக்கிறது. 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், 6 மாத கைக்குழந்தையுடன் வரும் பக்தர்கள் எளிதாக சுவாமி தரிசனம் செய்யும் வகையிலான திட்டங்கள் மேற்கொள்ளப்படும். இங்கே 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் இருக்கிறது. சபரிமலை, திருப்பதி போல் நாம் இங்கே செய்ய முடியாது. இங்கே உள்ள கோயில்களில் ஒவ்வொரு ஒரு…

Read More

தமிழகத்தில் ஒரு ஆண்டில் விபத்துகளில் 18 ஆயிரம் பேர் சாவு… அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி…!

கோவை காந்திபுரத்தில் 300 கோடி ரூபாய் செலவில் திமுக ஆட்சி காலத்தில் துவக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் கட்டுமான பணிகளை இன்று தமிழக பொதுப்பணித்து, நெடுஞ்சாலை, விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆய்வு செய்தார். இது தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா நிருபர்களிடம் கூறியதாவது: கோவையில் தொழில்துறை பொருளாதார துறை விவசாயத்துறை முக்கியத்துவம் வரய்ந்ததாக இருக்கிறது. நெடுஞ்சாலை சரியாக இல்லை என்றால் தொழில்துறை சரியாக இருக்காது. பெண்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. மாணவர்கள்…

Read More

Covai Metro, bypass project… அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கோவையில் ஆய்வு…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இதில் தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டு கோவை மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு திட்டப் பணிகள் தொடர்பாக ஆய்வு செய்தார். குறிப்பாக அவிநாசி ரோடு ஜிடி நாயுடு மேம்பாலத்தை கோல்டுவின்ஸ் பகுதியில் இருந்து நீலாம்பூர் வரை மேலும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீட்டிப்பு செய்வது தொடர்பாகவும் கோவை மாவட்டத்தில் துவக்கப்பட வேண்டிய…

Read More

தமிழகத்தில் செறிவூட்டப்பட்ட ரேஷன் அரிசி சப்ளை நிறுத்தம்…!

தமிழகத்தில் 39 மாவட்டங்களில், 268 ரேஷன் கிடங்குகள் இருக்கிறது. மாநில அளவில் 34,916 ரேஷன் கடைகள் இருக்கிறது. இந்த கடைகளின் மூலமாக 2.28 கோடி ரேஷன் கார்டுகளின் மூலமாக 7.01 கோடி குடும்ப உறுப்பினர்கள் பயன்பெற்று வருகின்றனர். நபருக்கு 5 கிலோ வீதம் ரேஷன் அரிசி ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டு வருகிறது. சாதாரண ரேஷன் அரிசியில் போதுமான சத்து இருப்பதில்லை. அதில் செறிவூட்டப்பட்ட அரிசி சேர்த்து வழங்க வேண்டும் என ஒன்றிய அரசு தெரிவித்தது. இந்த செறிவூட்பட்ட…

Read More