Covai Metro, bypass project… அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கோவையில் ஆய்வு…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது.

இதில் தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டு கோவை மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு திட்டப் பணிகள் தொடர்பாக ஆய்வு செய்தார்.

குறிப்பாக அவிநாசி ரோடு ஜிடி நாயுடு மேம்பாலத்தை கோல்டுவின்ஸ் பகுதியில் இருந்து நீலாம்பூர் வரை மேலும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீட்டிப்பு செய்வது தொடர்பாகவும் கோவை மாவட்டத்தில் துவக்கப்பட வேண்டிய பல்வேறு நெடுஞ்சாலை மற்றும் பாலம் தொடர்பான பணிகள் குறித்தும் நெடுஞ்சாலை அதிகாரிகளிடம் விசாரித்தார்.

பொதுப்பணித்துறை சார்பில் நடத்தப்பட வேண்டிய கட்டுமானப் பணிகள் குறிப்பாக பள்ளி மற்றும் அரசு அலுவலகங்கள் கட்டுமான பணிகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார். கோவை மாவட்டத்தில் Coimbatore metro rail project நிராகரிக்கப்பட்டது

இதற்கு மீண்டும் புதிய வரைவு திட்டம் தயாரிப்பு மத்திய அரசுக்கு அனுப்ப முடியுமா இந்த திட்டம் மீண்டும் கொண்டுவர முடியுமா என அதிகாரிகளிடம் ஆய்வு செய்தார். மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு 25 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. இந்த ரோடு தற்போதுள்ள போக்குவரத்து ஏற்றதாக இல்லை.

கடும் போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டில் 681 விபத்துக்கள் நடந்திருக்கிறது. இதில் 199 பேர் இறந்துவிட்டனர். 402 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து விபத்துக்கள் நடக்கிறது. எனவே இந்தப் பாதையை ஆறு வழி பாதையாக மாற்ற வேண்டும். இது தொடர்பாக Madukkarai neelambur bypass road widening project தயார் செய்து தேசிய நெடுஞ்சாலை ஆணையகத்திற்கு (NHAI) அனுப்பி வைக்கப்பட்டது.

திட்ட மதிப்பீடு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி நடக்கிறது. விரைவில் ஒப்புதல் கிடைததிருக்க வேண்டும் இன்னும் கிடைக்கவில்லை என அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது. இதேபோல் மதுக்கரை மரப்பாலம் ரயில்வே பாலம் பணி தொடர்ந்து தாமதமாகி வருகிறது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Coimbatore western bypass road 2 package work திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. நிதி ஒதுக்கீடு செய்தால் பணி நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை , பொதுப்பணித்துறை செயலாளர்கள் கோவை மாவட்ட நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *