கோவையில் முதல்வரிடம் மனு கொடுக்க போராடிய மாற்றுத்திறனாளி மீது வழக்கு…!

கோவை பெரியார் அறிவுலகம் முன்பு போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளி, அவரது மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை காந்திபுரத்தில் பெரியார் அறிவுலகத்தை நேற்று முதல்வர் விஜய் திறந்து வைத்தார். முன்னதாக, பெரியார் அறிவுலகத்துக்கு திருப்பூர் ஊத்துக்குளி பூசாரிபாளையத்தை சேர்ந்த கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி சத்யராஜ் (41), தனது மனைவி ஷைனி (40) என்பவருடன் முதல்வரை சந்தித்து இலவச வீடு கோரி மனு அளிக்க வந்தார்.

அப்போது பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு, போலீசார் அனுமதி அட்டை இல்லை என கூறி அவர்களை வளாகத்திற்குள் விட மறுத்தனர். அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்த சத்யராஜ், பெரியார் அறிவுலகம் செல்லும் பாதையின் நடுவே தரையில் படுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர், அவர்களை போலீசார் அனுமதி மறுத்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் சத்யராஜ் மற்றும் அவரது மனைவி ஷைனி மீது வழக்குப்பதிவு செய்தனர். முதல்வரிடம் மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளியின் மீது வழக்கு பதிவு செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

One thought on “கோவையில் முதல்வரிடம் மனு கொடுக்க போராடிய மாற்றுத்திறனாளி மீது வழக்கு…!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *