வடகிழக்கு பருவ மழை பாதிப்பு கோவையில் அதிகாரிகள் ஆலோசனை…

கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டது.

தென்மேற்கு பருவமழை பொய்த்து போன நிலையில் கடும் வெயிலுக்கு பிறகு இந்த மழை வந்தது. நேற்று 236 மிமீ மழை பதிவானது. நகரின் உள் பகுதியில் மழையின் தாக்கம் உச்சக்கட்டமாக இருந்தது. குறைந்த நேரத்தில் காற்றுடன் அதிக மழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதியில் இருந்த சாக்கடை, மழை நீர் வடிகால், ராஜ வாய்க்கால், குள வாய்க்கால்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது. பல இடங்களில் வழக்கம்போல் பிளாஸ்டிக், தெர்மோ கோல், கழிவுகள் அடைந்து கிடந்ததால் வெள்ள நீருடன் சாக்கடை பெருக்கெடுத்து ஊருக்குள், வீடுகளுக்குள் பாய்ந்தது.

இந்த மழையால் பல வீடுகளில் வெள்ளம் புகுந்தது. போத்தனூர், மலுமிச்சம்பட்டி எம்ஜிஆர் நகர், இருகூர், காளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 4 அடி உயர அளவிற்கு நீர் தேக்கம் காணப்பட்டது. மீண்டும் கனமழை அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

கோவையில் மழை பாதிப்பில் பல்வேறு அரசு துறையினர் குறிப்பாக பேரிடர் மேலாண்மை குழு மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை, உள்ளாட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை, மின் வாரியத்தினர் பணிகளில் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக புகார் வந்தது.

நேற்று, சென்னையிலிருந்து அதிகாரிகள் குழுவினர் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் மழை பாதிப்பு தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. கோவை நகரில் குறிப்பாக மாநகராட்சி எல்லைக்குள் மோசமான சூழல் இருக்கும் விவரங்களை சுட்டிக்காட்டி அதிகாரிகள் எச்சரித்தனர். பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நொய்யல் ஆறு, மாவட்டத்தின் பல்வேறு ஓடைகளின் நிலவரம், வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து விவரங்களை அறிந்து தெரிவிக்க உத்தரவிடப்பட்டது.

One thought on “வடகிழக்கு பருவ மழை பாதிப்பு கோவையில் அதிகாரிகள் ஆலோசனை…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *