கனமழையால் கோவை குற்றாலம் மூடல். சுற்றுலா பயணிகளுக்கு தடை…!

கோவை மேற்குதொடர்ச்சி மலையொட்டிய பகுதிகளில் பெய்த கனமழையால் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்குதொடர்ச்சி மலையொட்டிய பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இந்த மழையின் காரணமாக கோவை குற்றால அருவியில் காலையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் நலன்கருதி இன்று முதல் கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும் கோவை மாவட்டத்தில் இன்று, நாளை இரண்டு நாட்கள் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

கோவையில் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. வானம் தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்படுவதால், மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காலநிலை நிலவி வருகிறது.

புட்நோட்

2 thoughts on “கனமழையால் கோவை குற்றாலம் மூடல். சுற்றுலா பயணிகளுக்கு தடை…!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *