அரசு பஸ்சை நிறுத்தாத கண்டக்டர், டிரைவர் டிஸ்மிஸ்…!
கோவை கவுண்டம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் அரசு பேருந்தை நிறுத்தாமல் சென்றதாக தற்காலிக பணியாளர்களான பஸ் டிரைவர், கண்டக்டர் இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
கோவை காந்திபுரத்தில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி அரசு பஸ் நேற்று இரவு சென்றது. இந்த பஸ்சில் தற்காலிக பணியாளர்களான டிரைவர் ரஞ்சித்குமார், கண்டக்டர் கார்த்திகேயன் ஆகியோர் பணியில் இருந்தனர் இந்நிலையில், பஸ் கவுண்டம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் வந்த போது பயணிகள் சிலர் பஸ்சை நிறுத்த கூறியுள்ளனர்.
ஆனால், பஸ் நிற்காமல் சென்றதாக தெரிகிறது. அப்போது, கவுண்டம்பாளையம் பேருந்து ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த பயணி ஒருவர் மற்றொரு வாகனத்தில் சென்று அந்த பஸ்சை துடியலூர் அருகே வழிமறித்து நிறுத்தி ஏறியுள்ளார்.
பின்னார், கண்டக்டரிடம் பஸ்சை ஏன் நிறுத்தவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது, கண்டக்டர் கார்த்திகேயன் கை காட்டாததால் நிறுத்தவில்லை என அலட்சியமாக பதில் அளித்துள்ளார். அப்போது, அந்த பயணி கவுண்டம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தும் பேருந்தை நிறுத்தவில்லை நாங்கள் கை காட்டவில்லையா? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, அங்கு நடந்த சம்பவத்தை பயணி தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.
இதனை பார்த்த கண்டக்டர் செல்போனை பறித்து பயணியை தாக்க முயன்றதாக தெரிகிறது. அப்போது, பேருந்தில் இருந்த சக பயணிகள் கண்டக்டரிடம் ஏன் தாக்க முயற்சிக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினர். இந்த சம்பவத்தை தனது செல்போனில் வீடியோ எடுத்த பயணி ஒருவர், வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நிலையில் அந்த வீடியோ வைரலானது.
இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய போக்குவரத்துறை அதிகாரிகள் பஸ்சை பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்றது மற்றும் பயணியிடம் மோதல் போக்கை கடைப்பிடித்தது காரணமாக தற்காலிக ஊழியர்களான பஸ் கண்டக்டர் கார்த்திகேயன் மற்றும் டிரைவர் ரஞ்சித்குமார் ஆகிய இருவரையும் பணி நீக்கம் செய்தனர்.

Great vibes and even better rewards. I really appreciate how straightforward the rules are here. Definitely visit bdm444 for some quality entertainment.
Finally found the official source for the app. The installation was a breeze and the performance is top notch. If you are wondering where to get it, just head over to jljl5download.