டாஸ்மாக்கில் சில்லறை தராமல் மோசடி . கலெக்டர் ஆபீசில் புகார்

கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ் (72).

இவர் கோவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் “நான் சுற்றுலாத்துறை பாரில் மேலாளராக பணியாற்றி ஒய்வு பெற்றேன். கணபதி பகுதியில் உள்ள ஒரு மதுபான கடையில் தினமும் மது வாங்கி குடிப்பேன். இந்த கடையில் எவ்வளவு பணம் தந்தாலும் சில்லறை தர மாட்டார்கள். 10 ரூபாய் எடுப்பது மட்டுமின்றி என்னை போல் வயதானவர்களை மிரட்டி மீதமுள்ள பணத்தை அபகரித்து வருகிறார்கள்.

பணம் கேட்டால், கொடுத்தாச்சு அவ்வளவு தான் என மிரட்டி அடிக்க வருகிறார்கள்..

சட்டை போடாமல் பனியன் போட்டு லுங்கி கட்டி இவர்கள் சுற்றி கொண்டிருக்கிறார்கள். இவர்களை யாரும் தட்டி கேட்க முடியாது என நினைத்து அடாவடியாக செயல்படுகிறார்கள். இப்போதைய அரசு பல்வேறு சலுகை, ஊதிய உயர்வு அறிவித்துள்ளது. தவறு செய்தால் கட்டாயம் நடவடிக்கை என்றார்கள். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மதுபான விற்பனை தொழிலில் இருந்த என்னையே மோசடி செய்பவர்கள், சாதாரண மக்களையும் ஏமாற்றி மோசடி செய்யமாட்டார்களா?, டாஸ்மாக் கடைகளில் ஏன் இப்படி நடக்கிறது, பணத்தை ஏன் பறிக்கிறார்கள் என யாரும் கேட்பதில்லை. ஒவ்வொரு முறையும் 10 ரூபாய் வாங்குகிறார்கள், சில்லறை கர மறுக்கிறார்கள் என மதுபாட்டில் வாங்குபவர்கள் புகார் தர முன் வருவார்களா? எனக்கு எந்த வேலையும் இல்லாத நிலையில், மதுபிரியர்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என வந்தேன். இதை சரி செய்யவேண்டியது டாஸ்மாக், மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பு” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *