லாரிகளில் அரசு துறையினர் g pay மூலமாக லஞ்சம்… கோவை கலெக்டரிடம் புகார்

கோவை பொள்ளாச்சி கோமங்கலம் புதூர் பகுதியை சேர்ந்தவர் அருண் பிரசாத் (35). சமூக ஆர்வலர், சுய தொழில் செய்து வருகிறார். இவர் கோனை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று அளித்த

மனுவில் கூறியதாவது:

கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து கனிய வளங்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் பல்வேறு பகுதிகளுக்கு சப்ளையாகிறது. ஜல்லி, எம் சாண்ட், போல்டர் மற்றும் பிற கனிம் வளங்கள் 10 முதல் 22 சக்கரங்கள் கொண்ட டிப்பர் லாரிகள் மூலம் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், கேரளாவிற்கும் எடுத்து செல்லப்படுகிறது.

சில வாகனங்களில் ஓவர் லோடாக கனிம பொருட்கள் கொண்டு செல்கிறார்கள். லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களிடமிருந்து பல்வேறு அரசு துறைகளில் பணிபுரியும் சிலர் வெளிப்படையாக பணம் வாங்குகிறார்கள் கையில் மட்டுமின்றி ஜி பே மூலமாக பணம் வாங்கியிருக்கிறார்கள்.

பொள்ளாச்சி உடுமலை வட்டாரத்தில் அதிகளவு வாகனங்கள் ஒவர் லோடாக செல்கிறது. இந்த வாகனங்களில் 500 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வசூல் என்பது சர்வ சாதாரணமாக நடக்கிறது. மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை மாமூலாக வாங்கி வருகிறார்கள்.

வருவாய்த்துறை, போலீசார், கனிம வளம், ஆர்டிஓ செக்போஸ்ட் என பல இடங்களில் பல விதமாக வசூல் நடக்கிறது. அதிகாரிகள் தங்களது செல்போனில் ஜிபே, யுபிஐ பரிவர்த்தனையில் லாரி உரிமையாளர்கள், டிரைவர்களிடம் பணம் வாங்கியுள்ளனர். இந்த விவரங்களை ஆதாரங்களுடன் புகார் தரப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். இவர்களின் மின்னணு பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ய வேண்டும்.

கனிம வள போக்குவரத்து தொடர்பான அனுமதிகள், சோதனைச் சாவடி பதிவுகள், காவல்துறை பதிவுகள், சுரங்கத்துறை பதிவுகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும் குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பிற நபர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோத கனிம வளக் கடத்தலை தடுக்க நிரந்தர கண்காணிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், அருண் பிரசாத் கனிம வள மாமூல் விவகாரத்தில் தலையிட்டதால் தன் மீது பல்வேறு பகுதியில் வழக்குகள் பதிவு செய்து மிரட்டி வருவதாகவும் மாவட்ட நிர்வாகத்திடம் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

2 thoughts on “லாரிகளில் அரசு துறையினர் g pay மூலமாக லஞ்சம்… கோவை கலெக்டரிடம் புகார்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *