பாழாகி போச்சு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கட்டடம்…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலக பிரிவு அமைந்துள்ளது.

இதில், பழைய மற்றும் புதிய கட்டடம் இருக்கிறது. புதிய கட்டடத்தில் அலுவலக பிரிவு செயல்படுகிறது. 70 ஆண்டிற்கு முன் கட்டிய பழைய கட்டடத்தில் மாற்று திறனாளிகளுக்கான பொருட்கள், பல்வேறு ஆவணங்கள், பயிற்சிகள், மருத்துவ சோதனைகள் நடக்கிறது. மாற்று திறனாளிகள் அதிக நேரம் பழைய கட்டடத்தில் தான் காத்திருக்கின்றனர்.

இந்த கட்டடத்தின் கூரைகள் கீழே சரிந்து விழும் நிலையில் இருக்கிறது. மழை காலங்களில் கட்டடத்திற்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. பழைய கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்டி தர வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் கூறுகையில், “மாற்றுத்திறனாளிகள் உட்கார கூட போதுமான நாற்காலிகள் அமைக்கப்படவில்லை. கலெக்டர் அலுவலகத்தில் மாற்று திறனாளிகள் வந்து செல்லும் பாதை சிதலமடைந்து காணப்படுகிறது. சக்கர நாற்காலிகள் மூலமாக மாற்று திறனாளிகள் பிரிவுக்கு செல்ல முடியாது. போதுமான இடமின்றி மாற்று திறனாளிகளுக்கு வழங்க

வேண்டிய சக்கர நாற்காலிகள், இதர பொருட்களை வளாகத்தில் ஆங்காங்கே போட்டு செல்கிறார்கள். இதை எல்லாம் சரி செய்து தர வேண்டும்” என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *