தமிழகத்தில் இலவச பஸ் பயணம் அறிவிப்பு வருமா… அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி…

கோவையில் தனியார் மருத்துவமனையில் உடல்நல குறைவாக சிகிச்சை பெற்று வந்த தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: நான் ஆண்டுக்கு இரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். எனக்கு கோவை தனியார் மருத்துவமனையில் அனைத்து பரிசோதனைகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளது. உடல் நலம் சரியாக இருக்கிறது. தவெக அமைச்சர்கள் எல்லாம் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டும் என்ற தகவல் உள்ளது அது பற்றி உங்கள் கருத்து என்ன என…

Read More

தவெக ஆட்சி கவிழுமா. .. செந்தில் பாலாஜி பேட்டி…!

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் வெற்றி பெற்ற செந்தில்பாலாஜி கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட கோட்டை மேடு பகுதியில் வாக்காளர்களுக்கு இன்று நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேட்டியின்போது செந்தில்பாலாஜி கூறுகையில் கோவை தெற்கு தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்டத்தில், மகத்தான வெற்றியை மக்கள் வழங்கி உள்ளனர். கூட்டணி கட்சி தலைவர்களுடன் இணைந்து மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றோம். வரும் காலத்தில் 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். கோவையில் உள்ள 10…

Read More

எஸ்.பி வேலுமணிக்கு பதிலாக செ.ம வேலுச்சாமி… மாவட்ட செயலாளராக அறிவித்த எடப்பாடி

அதிமுகவில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக எஸ்.பி வேலுமணி இருந்தார். இவரை கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிரடியாக நீக்கி அவருக்கு பதிலாக முன்னாள் அதிமுக அமைச்சரும், அமைப்பு செயலாளராக இருந்த செ.ம வேலுச்சாமியை நியமித்தார். அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எஸ்பி வேலுமணி தரப்பினர் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. தமிழக வெற்றி கழகத்திற்கு எஸ்.பி வேலுமணி தரப்பு ஆதரவு வழங்கிய நிலையில் கட்சி பதவியை எடப்பாடி பழனிச்சாமி பறித்துள்ளார். அதே…

Read More

கோவை திமுக கோட்டை… உதயநிதி ஸ்டாலின் ஆவேச பேச்சு…!

கோவை காந்திபுரம் வி.கே.கே மேனன் ரோட்டில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது மக்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: நான் இங்கே வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். ஆனால் இங்கே பார்க்கும் போது நீங்கள் ஏற்கனவே உதயசூரியனுக்கு ஓட்டு போட முடிவு செய்திருப்பது தெரிகிறது. போன தடவை நான் இங்கே வந்தேன் பிரச்சாரம் செய்தேன். ஆனால் நீங்கள் வெற்றி வாய்ப்பு தரவில்லை. ஆனால் இந்த முறை வெற்றி வாய்ப்பு தர வேண்டும். ஒட்டு…

Read More

கொரோனா, அரக்கன், அமாவாசை செந்தில் பாலாஜி… கோவையில் வசைபாடிய எடப்பாடி..

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவையில் பிரச்சாரம் செய்தார். சித்தாபுதூர் ஆவாரம்பாளையம் சாலை சந்திப்பில் இருந்து விகேகே . மேனன் சாலை வரை ரோடு ஷோ நடத்தினார். அப்போது அவர் மக்கள் மத்தியில் பேசியது ; கொரோனா வைரஸ் நோயை விட கடுமையான ஒன்று கரூரில் இருந்து வந்து கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் பரவியியது. கொரோனாவுக்கு கூட மருந்து இருக்கு. இங்கே வந்திருக்கும் வைரஸுக்கு மருந்து இல்லை, உங்கள் வாழ்க்கையை முடித்து கூட்டி விடுவார்…

Read More

கோவை வடக்கில் வானதிக்கு வாய்ப்பு , அண்ணாமலைக்கு சீட் மறுப்பு…

அதிமுக கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழகத்தில் 27 சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது .இந்த நிலையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட அதிக எதிர்பார்ப்பு நிலவியது . அவர் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் என கட்சியினர் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர் . ஆனால் கோவை தெற்கு தொகுதியில் ஏற்கனவே எம்எல்ஏவாக உள்ள வானதி சீனிவாசன் வடக்கு தொகுதியில் வாய்ப்பு கேட்டு…

Read More

தமிழக தேர்தலில் ‘விசில்’ சுயேச்சை சின்னமாக தேர்தல் கமிஷன் அறிவிப்பு…

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜயின் விசில் சின்னம் சுயேச்சை சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் சுயேட்சை வேட்பாளர்களுக்காக 184 சின்னங்கள் தேர்தல் செய்து தேர்தல் கமிஷன் கடந்த 30ம் தேதி அறிவித்தது. இதில் ஏசி, அலமாரி, நடை வண்டி, பலூன், வளையல், பேட், பேட்ஸ்மேன், பேட்டரி டார்ச், நெக்லஸ், பெல்ட், பெஞ்ச், சைக்கிள் பம்பு, பைனாகுலர், பிஸ்கட், கரும்பலகை, படகு, பாக்ஸ், ரொட்டி,…

Read More

விஜய் களத்திற்கே வரவில்லை… எஸ் பி வேலுமணி பேட்டி

கோவை விமான நிலையத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதற்காக வந்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சருமான எஸ்பி வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது தமிழ்நாடு தேர்தல் களம் உற்சாகமாக இருக்கின்றது. கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை சந்தித்தோம். பின்னர் சந்தோஷமாக கேரள மாநிலத்திற்கு பிரசாரத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். தமிழகத்தில் இந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெறும். தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் சட்டம்-ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. விலைவாசி உயர்வு, மின் கட்டண…

Read More

சமுதாய வானொலி குறித்து இரு நாள் கருத்தரங்கம்

இந்தியாவில் கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம், பொறியியல், தொழில் மற்றும் பல்வேறு சேவைகளை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க சமுதாய வானொலி (கம்யூனிட்டி ரேடியோ) நீண்ட காலமாக நம்பிக்கையுடன் பணியாற்றி வருகிறது. மத்திய அரசின் மானிய உதவியுடன் பல்வேறு சேவை திட்டங்களை கம்யூனிட்டி ரேடியோ மூலமாக நிறுவனங்கள் நடத்துவோர் செய்ய முடியும். செயற்கை நுண்ணறிவு மூலமாக கம்யூனிட்டி ரேடியோ அடுத்த கட்ட மேம்பாட்டை எட்டி உள்ளது. இதன் வளர்ச்சி எதிர்காலம் செயல்திட்டம் தொடர்பாக நீலகிரி மாவட்டத்தில் விநாயகா இன்…

Read More

சட்டமன்ற தேர்தலால் புதிய ரேஷன் கார்டு வழங்க தடை…!

தமிழகத்தில் ரேஷன் கார்டு கேட்ட தினமும் பொதுமக்கள் www.tnpds.gov.in என்ற வெப்சைட் மூலமாக விண்ணப்பங்கள் வழங்கி வருகிறார்கள். ரேஷன் கார்டு பெயர் சேர்க்க நீக்க திருத்தம் செய்ய செல்போன் மற்றும் முகவரி விவரங்களை பதிவு செய்ய ஆன்லைன் போர்டல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. பொதுமக்களுக்கு இனி புதிதாக ரேஷன் கார்டு வழங்கக் கூடாது என வழங்கல் பிரிவுக்கு உத்தரவு தரப்பட்டது . அதைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும்…

Read More