கோவை வடக்கில் வானதிக்கு வாய்ப்பு , அண்ணாமலைக்கு சீட் மறுப்பு…
அதிமுக கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழகத்தில் 27 சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
இதில் கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது .இந்த நிலையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட அதிக எதிர்பார்ப்பு நிலவியது . அவர் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் என கட்சியினர் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர் .
ஆனால் கோவை தெற்கு தொகுதியில் ஏற்கனவே எம்எல்ஏவாக உள்ள வானதி சீனிவாசன் வடக்கு தொகுதியில் வாய்ப்பு கேட்டு காத்திருந்தார். அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
கட்சி நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அறிவிப்பில் வானதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
ஆனால் அண்ணாமலைக்கு இந்த முறை சீட்டு ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மேலும் அண்ணாமலையை மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட கட்சி நிர்வாகம் வலியுறுத்தியதாக தெரிகிறது. அந்த தொகுதியில் அவர் போட்டியிட விரும்பவில்லை. பாரதிய ஜனதா கட்சியின் ஸ்டார் வேட்பாளராக அண்ணாமலை வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்காததால் அந்த கட்சியினர் தற்போது மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
