கோவையில் கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்து 2 பேர் பலி…

கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்தவர் அர்ஜுன் குமார் (31). பிளம்பர் இவர் மாநகராட்சி மத்திய மண்டலம் பாரதி பார்க் ரோடு பகுதியில் உள்ள கழிவு நீர் அகற்றும் மையத்தில் மோட்டார் பம்பு சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இவருடன் பாப்பம்பட்டி பிரிவு பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் ஆக பணியாற்றும் சுரேஷ்குமார் (32) என்பவரும் இன்று இரவு பணியில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் அர்ஜுன் குமார் மோட்டாரை சரி செய்யும் போது கழிவு நீர் தொட்டிக்குள் தவறி விழுந்தார்.

அவரைக் காப்பாற்ற சுரேஷ்குமார் முயன்ற போது அவரும் கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்து விட்டார் .இருவரும் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக கவுண்டம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு சென்று தீயணைப்பு துறையினர் கழிவுநீரை அகற்றி சடலத்தை மீட்டனர். மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கழிவுநீர் தொட்டிக்குள் விஷவாயு தாக்கம் அபாயம் இருந்தும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடு செய்யாமல் ஊழியர்களை பணி செய்யவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மாநகராட்சி அதிகாரிகள் உரிய பாதுகாப்பு நடைமுறையை கடைபிடிக்கவில்லை. இதன் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர் .கழிவு நீர் தொட்டியில் இரண்டு பேர் உயிரிழந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்தவர் அர்ஜுன் குமார்( 31 ). பிளம்பர். இவர் மாநகராட்சி மத்திய மண்டலம் பாரதி பார்க் ரோடு பகுதியில் உள்ள கழிவு நீர் அகற்றும் மையத்தில் மோட்டார் பம்பு சரி செய்யும் பணியில் இன்று இரவு ஈடுபட்டிருந்தார்.

இவருடன் பாப்பம்பட்டி பிரிவு பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் ஆக பணியாற்றும் சுரேஷ்குமார் (32) என்பவரும் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் அர்ஜுன் குமார் மோட்டாரை சரி செய்யும் போது கழிவு நீர் தொட்டிக்குள் தவறி விழுந்தார்.

அவரைக் காப்பாற்ற சுரேஷ்குமார் முயன்ற போது அவரும் கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்து விட்டார். இருவரும் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக கவுண்டம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்று தீயணைப்பு துறையினர் கழிவுநீரை அகற்றி சடலத்தை மீட்டனர்.

மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கழிவு நீர் அகற்றும் பகுதியில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடு செய்யவில்லை என தெரிகிறது. கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கும் அபாயம் இருந்தும் தொட்டி முடியை திறந்து வைத்து பணி செய்ய மாநகராட்சி நிர்வாகத்தினர் அனுமதி வழங்கி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. கழிவு நீர் தொட்டியில் விழுந்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *