கோவையில் ஜிஎஸ்டி பில் மோசடி செய்து சரக்கு சப்ளை அதிகரிப்பு…
கோவை நகர், புறநகரில் வணிக வர்த்தக நிறுவனங்கள், சில்லரை விற்பனை மையங்கள், மொத்த விற்பனை மையங்கள் போன்றவற்றில் முறையாக ஜிஎஸ்டி பில் போட்டு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும்.
இதில் மாநிலம், மத்தியம் என இருவகை ஜிஎஸ்டி விவரங்கள் குறிப்பிடப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் சில விற்பனை கடைகள் ஜிஎஸ்டி முறையாக வழங்காமல் மோசம் செய்வதாக தெரிகிறது. குறிப்பாக சில எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் கடைகள், மளிகை, உணவு தானிய பொருட்கள் விற்பனை மையங்கள், பல்வேறு சேமிப்பு குடோன்கள், விற்பனைக்கு அனுப்பும் நிறுவனங்கள் ஜிஎஸ்டி நடைமுறையை பின்பற்றாமல் விதிமுறை மீறல் செய்வதாக தெரிகிறது.
இந்த முறைகேடுகளை வணிக வரித்துறையினர் அமலாக்க பிரிவினர் தனி குழு அமைத்து ஏரியா வாரியாக சோதனை நடத்தி கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால், இதற்கான பறக்கும் படைகள் எப்போதாவது செயல்படுகிறது. பெயரளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தியாகி குமரன் வீதி, வைசியாள் வீதி, பெரிய கடை வீதி, ராஜ வீதி, கருப்ப கவுடர் வீதி, கடலைக்கார சந்து, அவினாசி ரோடு மேம்பால கீழ் பகுதி, மில் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பில் நடைமுறையை பலர் பின்பற்றாமல் இருப்பதாக தெரிகிறது. இதனால் மத்தியம், மாநில அரசுக்கு வரவேண்டிய வருவாய் வெகுவாக குறைகிறது. பொருட்களை வாகனங்களில் எடுத்து செல்வோர் கட்டாயம் இ வே பில் வைத்திருக்க வேண்டும். ஆனால் இ வே பில் போடாமல் சப்ளை செய்வதும் துணிச்சலாக நடக்கிறது.
கடைகளில் விற்பனை செய்யும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி பில் போட்டு வாங்க வேண்டும். அதுபோல் பில் தராமல் இருக்கும் நிறுவனங்கள் தொடர்பாக வணிக வரித்துறையின் அமலாக்க பிரிவினருக்கு புகார் தரலாம். அந்த நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமலாக்க பிரிவினர் தெரிவித்தனர்.

Loving the variety of games here. The login process is seamless and I had no issues getting started. Great experience with pera789casinologin