கோவை எம்ஜிஆர் மார்க்கெட் சகதியாச்சு…

கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் மொத்த காய்கனி மார்க்கெட் (எம்ஜிஆர் மார்க்கெட்) செயல்படுகிறது.

நீலகிரி, கர்நாடகா உள்பட பல்வேறு பகுதியில் இருந்து வெங்காயம், கேரட், பீட்ரூட், தக்காளி, உருளை கிழங்கு உள்பட பல்வேறு காய்கறிகள் லோடுகள் அதிகமாக இங்கே குவிகிறது. இந்த மார்க்கெட்டில் இருந்து கெட்டு போன காய்கறிகள் கழிவுகளாக வெளியேற்றப்படுகிறது. டன் கணக்கில் கழிவுகள் குவிவதால் இதனை அகற்ற மாநகராட்சியினர் திணறி வருகின்றனர்.

காய்கறி கழிவுகளை மேலாண்மை செய்ய தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியத்தின் சார்பில் திறன் மிகு சந்தை திட்டம் உருவாக்க திட்டமிடப்பட்டது. சென்னை கோயம்போடு மார்க்கெட்டில் ஏற்கனவே திறன் மிகு சந்தை திட்டம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது.

இதேபோல் கோவையில் திறன் மிகு மார்க்கெட் முதல் முறையாக உருவாக்க முயற்சி எடுக்கப்பட்டது.

இதில் மேற்கொள்ள வேண்டிய வசதிகள், குடிநீர் திட்டம், கழிவு மேலாண்மை, வாகனங்கள் நிறுத்தம். மக்கள், வியாபாரிகளுக்கான வசதிகள், மார்க்கெட் பகுதியில் கார்பன் அடர்த்தி கண்காணிப்பு போன்ற அம்சங்களை வைத்து ஆய்வு நடத்தி செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டது.

ஆனால், ஒரு ஆண்டாகியும் திறன் மிகு சந்தை திட்டம் பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்த மார்க்கெட்டில் இன்னும் அடிப்படை வசதிகள் கூட செய்யவில்லை. மழை நீரில் சகதியாக மக்கள் சென்று வரக்கூட முடியாத அவலத்தில் இந்த மார்க்கெட் இருக்கிறது.

One thought on “கோவை எம்ஜிஆர் மார்க்கெட் சகதியாச்சு…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *