தமிழகத்தில் இலவச பஸ் பயணம் அறிவிப்பு வருமா… அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி…

கோவையில் தனியார் மருத்துவமனையில் உடல்நல குறைவாக சிகிச்சை பெற்று வந்த தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: நான் ஆண்டுக்கு இரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம்.

எனக்கு கோவை தனியார் மருத்துவமனையில் அனைத்து பரிசோதனைகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளது. உடல் நலம் சரியாக இருக்கிறது. தவெக அமைச்சர்கள் எல்லாம் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டும் என்ற தகவல் உள்ளது அது பற்றி உங்கள் கருத்து என்ன என கேட்டபோது ,

இந்த மருத்துவமனை எனது உறவினருடையது. நான் விமான நிலையம் வரும்போது கூட இங்கு இரவு நேரத்தில் ஓய்வு எடுக்க செல்வேன். எனக்கு இது இலவசமாக கிடைக்க கூடிய சலுகை. சிகிச்சைக்காக வேறு மருத்துவமனை சென்று அதற்கான நிதியை அரசிடம் இருந்து பெற வேண்டிய எனக்கு ஏற்படவில்லை.

கோவை சிறுமி கொலை வழக்கில் தாயாரிடம் கையெழுத்து பெறாமலே உடல் தகனம் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு

சிறுமி பலாத்கார கொலை விவகாரம் தொடர்பாக ஐஜி தெளிவாக கூறி விட்டார். சட்டத்துறையும், முதல்வரும் உத்தரவு வழங்கி இருக்கிறார்கள். உடனடியாக அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் அரசு பஸ் நிலையம் பெண்களுக்கு இலவச பயணம் என்ற அறிவிப்பு எப்போது துவங்கப்படும் என்ற கேள்விக்கு , திமு கழகம் எத்தனை ஆண்டுகள் கழித்து வழங்கினார்கள் என உங்களுக்கே தெரியும். ஒவ்வொறு திட்டங்களும் படிப்படியாக அரசு நிதி நிலைக்கேற்ப வழங்கப்படும்.

இதையெல்லாம் தமிழக முதல்வர் முடிவு செய்ய வேண்டிய ஒன்று. இந்த கேள்வியை என்னிடத்தில் கேட்பது சரியாக இருக்காது. முதல்வர்தான் எந்தெந்த கால கட்டத்தில் எப்படி முடிவு செய்ய வேண்டும் என்று அறிவிப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *