கோவை ரயிலில் 22 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை மார்க்கமாக ரயில்களில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுவதாக அடிக்கடி புகார் வருகிறது. இதை தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் , போதைப்பொருள் தடுப்பு போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை திருப்பூரிலிருந்து கோவை நோக்கி வந்த லோகமானியா திலக் எக்ஸ்பிரஸ் ரயிலை கோவை ரயில் நிலையத்தில் போலீசார் சோதனையிட்டனர். அப்போது அதில் சந்தேகப்படும் வகையில் ஒரு பெட்டியில் ரெக்ஸின் பேக் இருந்தது. அதை திறந்து பார்த்தபோது திறந்து பார்த்தபோது அதில்…

Read More

கோவை மாநகராட்சி பட்ஜெட்டில் ஏமாற்றம்

கோவை மாநகராட்சியில் ஆண்டு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களை மேயர் ரங்கநாயகி கவுன்சில் கூட்டத்தில் அறிவித்தார். அவர் கூறியதாவது ; மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் பழுதடைந்த கட்டிடங்களில் தேவையான மராமத்து பணிகளை மேற்கொள்ள இந்த நிதி ஆண்டில் ரூ. 20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகங்களில் சுகாதார நிலையம் மேம்படுத்த ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் உடல்…

Read More

கோவையில் நகை கடையில் 40 பவுன் கொள்ளை..!

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ரமேஷ் (48). இவர் கோவை சிங்காநல்லூர் வசந்தா மில் பகுதியில் தங்க நகை அடகு கடை, நகை விற்பனை மற்றும் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடை பின்புறம் இவரது வீடு உள்ளது. நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு ரமேஷ் கடைக்கு விடுமுறை அளித்துவிட்டு இரவு குடும்பத்தினருடன் வெள்ளலூர் பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டார். இன்று காலை அவர் தனது வீட்டிற்கு திரும்ப வந்தார். அப்போது இவரது கடையின் பின்புற ஷட்டர்…

Read More

திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகனாக இருக்கும்.. அமைச்சர் கோவி செழியன் பேட்டி..

கோவை அவிநாசி ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் கோவை,திருப்பூர் கரூர் மாவட்டங்களுக்கான சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கருத்து கேட்பு கூட்டம் இன்று நடந்தது . இதில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கோவை மண்டல திமுக பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சர்ருமான செந்தில் பாலாஜி தலைமையில் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து ஏராளமான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து அமைச்சர் கோவி.செழியன் நிருபர்களிடம் கூறியதாவது; திமுக எம்பி…

Read More

கோவை அரசு பள்ளியில் மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர்களால் பரபரப்பு..

கோவை சர்க்கார் சாம குளம் அருகே உள்ள வெள்ளமடை ஊராட்சியில் தொட்டிபாளையம் அரசு பள்ளி செயல்படுகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் தினமும் கழிவறை சுத்தம் செய்ய வைப்பதாக புகார் இருந்தது. மாணவர்கள் இந்த விஷயத்தை தங்களது பெற்றோர்களிடம் கூறி பள்ளிக்கு செல்ல மாட்டோம் என புலம்பி உள்ளனர். இந்த நிலையில் இன்று பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அப்போது ஆசிரியை முன்பு மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்த விஷயத்தை பயம் கலந்த தயக்கத்துடன் கூறினர்…

Read More

கோவையில் சத்துணவு ஊழியர்களை சந்தித்து பேசிய நைனார் நாகேந்திரன்

சத்துணவு ஊழியர்களிடம் ஆறுதல் கூறி பேசிய நயினார் நாகேந்திரன்.. காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இளநிலை உதவியாளர் நிலையில் பணி செய்பவர்களுக்கு 15,500 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விடிய விடிய அங்கேயே தங்கி சமையல் செய்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இன்று 10 நாள் போராட்டத்தில்…

Read More

ரூ.250 கோடியில் அமைக்கப்பட்ட கோவை மேற்கு பைபாஸ் ரோடு அடுத்த வாரம் திறப்பு..!

கோவை மதுக்கரை மைல்கல் பகுதியில் இருந்து நரசிம்மநாயக்கன்பாளையம் வரை 32.43 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேற்கு பைபாஸ் ரோடு அமைக்கும் பணி கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. மூன்று பேக்கேஜ் முறையில் பணிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் கட்டமாக மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 17.25 மீட்டர் அகலத்தில் நான்கு வழி பாதையாக ரோடு போடும் பணி நடத்தப்பட்டது. 250 கோடி ரூபாய் மதிப்பில் நடத்தப்பட்டு வந்த பணி தற்போது நிறைவு பெற்று ரோடு மார்க்கிங் மற்றும்…

Read More

கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிக்கு துணை ராணுவ படை விரைவில் வருகை..!

கோவை மாவட்டத்தில் சூலூர், சிங்காநல்லூர், கோவை தெற்கு, வடக்கு, தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, கவுண்டம்பாளையம் என 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் 3524 ஒட்டு சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் சென்சிடிவ் ஓட்டு சாவடிகள் 450 முதல் 500 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கோவை மாவட்டத்திற்கு வெளி மாநிலத்தினர் அதிகளவு வந்து செல்கிறார்கள். கடந்த கால தேர்தல்களின் போது கோவை மாவட்டத்தில் பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடந்தது. மேலும் கோவை பதட்டமான…

Read More

கோவையில் ஊருக்குள் புகுந்த 3 யானைகள் ; ஹாரன் அடித்து விரட்டியதால் பரபரப்பு..!

கோவை குப்பனூர் தீத்திபாளையம் பகுதியில் நேற்று மூன்று யானைகள் காட்டிலிருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்தன . யானைகள் வாழைத்தோட்டம் மற்றும் குடியிருப்பு பகுதியில் இருந்த நீர் தொட்டிகளில் தண்ணீர் குடித்து ஜாலியாக சுற்றிக் கொண்டிருந்தன. இந்த நிலையில் அந்த பகுதி பொதுமக்கள் யானைகளை வாகனங்களில் சென்று ஹாரன் சத்தம் மூலமாக விரட்டினர் ‌ . மூன்று பெண் யானைகள் வாகனங்களின் சத்தம் கேட்டு வேகமாக ரோடு வழியாக ஓட்டம் பிடித்தன. தொடர்ந்து ஹாரன் சத்தம் கேட்டுக் கொண்டே…

Read More

கோவையில் கனிமம் கடத்தல் கண்காணிக்க அமைக்கப்பட்ட ஏஐ கேமராக்கள் முடக்கம்..!

கோவை மாவட்டத்தில் கனிமப் பொருட்கள் கடத்தல் மற்றும் கல்குவாரிகளில் முறைகேடுகளை கண்டறிய கனிம வாகனங்களை கண்காணிக்க மாவட்ட அளவில் முக்கிய செக்போஸ்ட்களில், மாவட்ட எல்லை சந்திப்பு ரோடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டது. இந்த கேமராக்களை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து நேரடியாக கண்காணிக்க வசதி செய்யப்பட்டது.கடந்த 3ம்தேதி இந்த கண்காணிப்பு கேமரா மற்றும் கட்டுப்பாட்டு அறையை கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் திறந்து வைத்தார். இதில் 108 ஏஐ கண்காணிப்பு…

Read More