கோவையில் 60 ஆயிரம் ரூபாய் லஞ்சம்; வணிகவரி அலுவலர் கணவருடன் கைது..!
கோவை வணிக வரித்துறை உதவி ஆணையராக பணிபுரிந்து வருபவர் மகேஸ்வரி(48). இவரது கணவர் தனசேகர்(52). உதவி ஆணையர் மகேஸ்வரியிடம் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரியும் அபினேஷ் என்பவர் நிறுவனத்தின் சார்பில் அதிகமாக செலுத்திய வணிகவரியை (இன்புட் வரி) திரும்ப பெற விண்ணப்பித்து இருந்தார். இதற்கு ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என உதவி ஆணையர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார். அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என அபினேஷ் தெரிவித்த நிலையில், இறுதியாக 60 ஆயிரம்…
