கோவை மாவட்டத்தில் பணம் பரிசு பொருள்: 120 புகார்கள் பதிவு
புகார் கட்டுப்பாட்டு அறை
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுபாட்டு அறை திறக்கப்பட்டு 10 சட்டமன்ற தொகுதிகளை கண்காணிக்கப்படுகிறது. பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு படைகளை கண்டறிய ஜிபிஎஸ் டிராக்கிங் சிஸ்டம் பிரிவும் துவக்கப்பட்டது. தினமும், ஒவ்வொரு வாகனமும் எந்த எரியா வழியாக சென்று வருகிறது என இதில் கண்காணிக்கப்படுகிறது.
கட்டுப்பாட்டு அறையில் 1950, 1800 425 0086 என்ற இலவச தொடர்பு எண் 0422 2300156, 0422 2300157 என்ற தொலைபேசி எண்கள் மூலமாக புகார்கள் பெறப்பட்டு வருகிறது, தேர்தல் கமிஷனின் சி விஜில் என்ற செயலி மூலமாக 50 புகார்கள் பெறப்பட்டது. இதில் புகார்கள் தவிர மற்ற புகார்கள் தொடர்பாக விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. நேற்று முன் தினத்திலிருந்து நேற்று வனர் செதாலைபேசி மூலமாக 70 புகார் அழைப்பும், சி விஜில் மூலமாக 50 புகார்களும் பெறப்பட்டது. இதி தொலைபேசி புகாரில் 56 புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மற்ற புகார்கள் விசாரணையில் இருக்கிறது. பரிசு பொருட்கள் பணம் தொடர்பாக பல இடங்களில் புகார்கள் அதிகமாக வருகிறது தெற்கு சட்டமன்ற தொகுதியில் பாத்திரம் தொடர்பாக புகார் வந்தது. பறக்கும் படை செல்லும் முன் வாகனங்களில் பாத்திரங்களை எடுத்து சென்றதாக மக்கள் தெரிவித்தனர்.
