19 முறையாக வெடிகுண்டு மிரட்டல்…
கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை ஒரு இமெயில் வந்திருந்தது. அதில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த குண்டு விரைவில் வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே இதே பெயரில் சில முறை இ மெயில் வந்திருந்தது. இதை தொடர்ந்து தொடர்ந்து கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் மோப்பநாய், மெட்டல் டிடக்டர் மூலமாக சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இதே போல் இமெயில் மூலமாக மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது . தற்போது 19வது முறை வெடி குண்டு மிரட்டல் வந்திருக்கிறது. மிரட்டும் மர்ம நபர் யார் என கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். கலெக்டர் அலுவலகத்தின் கட்டமைப்புகளை தெரிந்த நபர் இந்த மிரட்டலை விடுப்பதாக தெரிகிறது. கடந்த சில மாதங்களாக கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்திருக்கிறது. ஆனால் கலெக்டர் அலுவலகம் போல், தொடர்ந்து மிரட்டல் வரவில்லை .
மிரட்டல் இ மெயில் நபர் குறித்த விவரங்களை சைபர் கிரைம் போலீசாரால் கண்டறிய முடியவில்லை.
