குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர்க்க கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று நடந்த கூட்டத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு புகார் மனு அளித்தனர்.
நடப்பாண்டில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் புகார் மனு அளித்துள்ளனர். குறை தீர்க்கப்படுகிறதோ இல்லையோ கூட்டம் குறையவில்லை. தொடர்ந்து ஒரே பிரச்சனைக்காக பலமுறை மனு கொடுக்க வேண்டிய நிலைமை இருக்கிறது. கால் கிடைக்க மக்கள் கூட்டமாக காத்திருக்கும் நிலையை பார்த்தால் அதிகாரிகள் எந்த அளவுக்கு வேலை செய்கிறார்கள் என தெரிந்துவிடும். ஏழைகளின் கண்ணீரை துடைக்க அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
