6.50 லட்சம் பேர் இல்லை அப்புறம் எதுக்கு அத்தனை ஓட்டு சாவடி…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் எஸ் ஐ ஆர் என்ற வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்த பணி தொடர்பான தேர்தல் பார்வையாளர் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது . இதில் அரசியல் கட்சியை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
அப்போது கட்சி நிர்வாகிகள் மாவட்ட அளவில் ஆறு லட்சத்து 50 ஆயிரம் பேர் நீக்கப்பட்டு இருக்கிறார்கள் .இந்த நிலையில் கூடுதலாக 446 ஓட்டு சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது .வாக்காளர்கள் அதிகமாக நீக்கப்பட்ட நிலையில் கூடுதல் ஓட்டு சாவடி எதற்கு. அதை எல்லாம் கொஞ்சம் குறைத்து விடுங்க என அதிருப்தியோடு கூறி சென்றார்கள்.
தேர்தல் பிரிவினர் வீட்டில் இல்லாதவர்கள் முகவரி மாறி சென்றவர்கள் குறித்த விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் மீண்டும் வாக்காளர்களாக சேர்க்கலாம் என தெரிவித்தனர்.
