கோவையில் 174 ஓட்டு மெஷின் மக்கர்..
கோவை மாவட்டத்தில் 3117 ஓட்டு சாவடி மையங்கள் உள்ளது. வரும் தேர்தலுக்காக கூடுதலாக 446 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலமாக ஒட்டு சாவடிகளின் எண்ணிக்கை 3563 ஆக அதிகரிக்கவுள்ளது. மாவட்டத்திற்காக 8391 ஓட்டு பதிவு மெசின்கள், 5245 கட்டுப்பாட்டு மெசின்கள், 5885 ஒட்டு சீட்டு சரி பார்க்கும் மெசின்கள் என 19,521 மெசின்கள் பயன்பாட்டில் இருக்கிறது. இவை தெற்கு தாலுகா அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கமிஷன் சேமிப்பு குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த மெசின்களில் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பதிவான ஓட்டுக்கள், வேட்பாளர்களின் பெயர்கள், கட்சி மற்றும் சுயேட்சை சின்னங்கள், எண்ணிக்கை விவரங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் பதிவான வாக்குகள் குறித்த மொத்த விபரங்களும் இதில் இருக்கிறது இந்த மெசின்களை ஆய்வு செய்து முதல் நிலை சோதனை (எப்எல்சி) பணிகள் நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதன்படி கடந்த 12ம் கேகி முதல் பெல் நிறுவனத்தின் தொழில் நுட்ப குழுவினர் 13 பேர் ஓட்டு மெசின்களை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
இதில் இதுவரை 3830 ஓட்டு பதிவு மெசின்கள், 2930 கட்டுப்பாட்டு மெசின்கள், 2930 ஓட்டு சீட்டு சரி பார்க்கும் மெசின்கள் ஆய்வு செய்யப்பட்டது. மொத்தமாக 9690 மெசின்கள் சோதனை செய்து முடிக்கப்பட்டது. இவற்றில் 16 ஓட்டு பதிவு மெசின்கள் (இவிஎம்), 26 கட்டுப்பாட்டு கருவிகள் (கன்ட்ரோல் யூனிட்), 132 ஓட்டு சீட்டு சரி பார்க்கும் மெசின்கள் (விவி பேட்) என 174 கருவிகள் பழுதாகி இருப்பதாக தெரியவந்தது. இன்னும் 4545 ஓட்டு பதிவு மெசின்கள், 2289 கட்டுபாட்டு கருவிகள், 2823 ஓட்டு சீட்டு சரி பார்க்கும் கருவிகள் பரிசோதனை செய்யப்பட வேண்டியிருக்கிறது. இதில் தகுதி வாய்ந்த ஓட்டு மெசின்கள், கட்டுபாட்டு கருவிகள் மட்டுமே வரும் சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ளது. இதர மெசின்களை நீக்கம் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது. பழுதான மெசின்கள் அனைத்து தேர்தல் கமிஷன் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. வரும் ஜனவரி 10ம் தேதி மொத்த பணிகளும் முடிக்கப்படும். அதற்கு பின் ‘மாக் போல் என்ற மாதிரி ஓட்டு பதிவு பணிகள் அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் நடத்தப்பட்டு ஓட்டு மெசின்கள் இயக்கம் சரியாக இருக்கிறதா என உறுதி செய்து தெரிவிக்கப்படவுள்ளது.
