மெஷினில் தலைமுடி சிக்கியதால் பரிதாபமாக இருந்த பெண்..!

கோவை பீளமேடு காந்தி மாநகர் பகுதியை சேர்ந்த வின்சென்ட் என்பவர் மனைவி ஆனந்த ஜோதி (50). இவர் பீளமேடு பகுதியில் உள்ள மர அறுப்பு மில்லில் வேலை செய்து வந்தார். நேற்று வேலை செய்த போது இவரது தலை முடி மெஷினில் மாட்டியது. இழுக்க முடிகின்ற போது வெளியே வரவில்லை. தலைமுடியுடன் தலை உள்ளே சிக்கியதால் பலத்த ரத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை வழங்கியும் அவர் உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *