பஸ் சக்கரத்தில் தலை வைத்து விபரீத தற்கொலை

கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து வெளியே வந்த ஒரு டவுன் பஸ்ஸில் பயணிகள் ஏறிக் கொண்டிருந்தனர். அந்த பஸ் வாளையார் நோக்கி புறப்பட்டபோது அங்கே பேண்ட் சர்ட் அணிந்திருந்த சுமார் 25 வயது வாலிபர் திடீரென பின் சக்கரத்தில் தலை வைத்து படுத்து விட்டார். பஸ்ஸின் சக்கரம் ஏறி இறங்கியதில் தலை சிதறி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக காட்டூர் போலீசார் விசாரிக்கிறார்கள். பயணியில் முன்னிலையில் பொது இடத்தில் வாலிபர் திடீரென பஸ் டயரில் பாய்ந்து தற்கொலை செய்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *