ரூ.80 கோடி ரெடி பைபாஸ் ரோடு போட நிலம் வாங்க..

கோவை மேற்கு பைபாஸ் ரோட்டில் 3ம் கட்ட பணிக்காக 80 கோடி ரூபாய் நில ஆர்ஜித பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணி துவக்கப்படும்.மாநில நெடுஞ்சாலைத்துறை திட்ட பிரிவு சார்பில் மதுக்கரை மைல்கல் முதல் நரசிம்ம நாயக்கன்பாளையம் வரை 32.43 கி.மீ தூரத்திற்கு பைபாஸ் ரோடு அமைக்கும் பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 11.8 கி.மீ தூரத்திற்கு 250 கோடி ரூபாய் செலவில் ரோடு பாலம் கட்டும் பணிகள் முடியும் நிலையில் இருக்கிறது. அடுத்த கட்டமாக மாதம்பட்டி முதல் சோமையம்பாளையம் வரை 2ம் கட்டடமாக பணிகள் துவக்கப்படவுள்ளது. இதற்கான நிலம் எடுப்பு பணிகள் முடியும் நிலையில் இருக்கிறது. திட்ட பணிகள் மாநில நெடுஞ்சாலைத்துறை வசம் இருந்து தமிழக நெடுஞ்சாலை ஆணையகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த 3 கட்ட பணிகளுக்கான நிலம் எடுப்பு அதிகாரம் அனைத்தும் மாநில நெடுஞ்சாலைத்துறை வசமே இருக்கிறது. தற்போது சோமையம்பாளையம் முதல் கணுவாய் வரை உள்ள 3ம் கட்ட பணிகளுக்கான நிலம் எடுக்கும் பணி துவக்க உத்ததரவிடப்பட்டுள்ளது. பன்னிமடை, குருடம்பாளையம், நஞ்சுண்டாபுரம், கணுவாய், நரசிம்ம நாயக்கன்பாளையம் பகுதியில் நிலம் எடுக்க வேண்டிய பகுதிகள் தொடர்பாக அந்த பகுதி விவசாயிகளுக்கு அறிவிப்பு வழங்கி நிலம் பெறப்படும். 80 கோடி ரூபாய் நில எடுப்புக்காக செலவிடப்படவுள்ளது. நில எடுப்பு பணிகள் முடிந்ததால் ஒரே நேரத்தில் 2 மற்றும் 3ம் கட்ட பணிகள் நடக்க வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *