கோவை மாவட்டத்தில் 49 கொலை, 514 விபத்து சாவு…!
கோவை மாவட்டததில் கடந்த 2025ம் ஆண்டில் மொத்தம் 49 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடியிசம பழிவாங்கல் சமுதாயம், சாதி அல்லது அரசியல் காரணங்களால் எந்தக் கொலை வழக்குகளும் பதிவாகவில்லை.
பதிவான கொலை வழக்குகளில் வாக்குவாதம் தொடர்பாக 13 கொலை, மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் 15 கொலை, பாலியல் காரணமாக 4 கொலை, குடும்பத தகராறில் 9 கொலை திருமணம் தாண்டிய உறவு தொடர்பாக 4 கொலை, காதல் விவகாரத்தில் ஒரு கொலை, திடீர் தூண்டுதலில் 3 கொலை நடந்திருக்கிறது.
மாவட்ட அளவில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மொத்தம் 53 குற்றவாளிகள் தடுப்புக் காவ்லில் வைக்கப்பட்டுள்ளனர்.
572 சொத்து குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 658 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2.33 கோடி ரூபாய் மதிப்புள்ள திருடப்பட்ட சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. இதில் 336 சவரன் (2.68 கிலோ) தங்க நகை, 49.57 லட்ச ரூபாய் 85 இருசக்கர வாகனங்கள், 8 நான்கு சக்கர வாகனங்கள் மீட்கப்பட்டு உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 314 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2024ம் ஆண்டில் பதிவான 371 வழக்குகளுடன் ஒப்பிடுகையில் 15 சதவீதம் குறைவாகும். இவ்வழக்குகளில் சம்பந்தப்பட்ட 249 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் போக்சோ என்ற சிறார் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 240 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2024ம் ஆண்டுடன் ஆண்டு (266 வழக்குகள்) ஒப்பிடுகையில் 10 சதவீதம் குறைவாகும். இவ்வழக்குகளில் 249 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
246 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதில் 82 வழக்குகள் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும், 13 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் மொத்தம் 2,597 சாலை விபத்து வழக்குகள் பதிவானது. இதில 574 பேர் உயிரிழந்தனர். இது 2024ம் ஆண்டு காலகட்டத்தில் விபத்துகளில் 600 பேர் இறந்தனர் .
2024ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் விபத்து சாவு 22 சதவீதம் குறைவாகும். மற்றும் 2,083. உயிரிழப்பில்லா விபத்துகள் நடந்தது. மேலும், 1,15,318 மோட்டார் வாகன சிறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதன் மூலம் 1.07 கோடி ரூபாய் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
20 சிறப்பு சோதனை நடவடிக்கைகளின் மூலம் போதை பொருட்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் 464 வழக்குகள் பதிவானது. இதில் 556 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 670 கிலோ போதைப்பொருட்கள் (கஞ்சா மற்றும் சிந்தெடிக் மருந்துகள்) பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் மதிப்பு 66.90 லட்ச ரூபாய். இந்த வழக்குகளில் 29 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2024 ம் ஆண்டில் பதிவான 374 வழக்குகளுடன் ஒப்பிடுகையில் வழக்குகளில் 24 சதவீதம் அதிகரித்துள்ளது. பறிமுதல் சதவீதம்
52 சதவீதம் அதிகம் 499 வழக்குகளுடன் தொடர்புடைய 1,621 கிலோ போதைப்பொருட்கள் நடைமுறை விதிமுறைகளின்படி அழிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் 12,940 ரெய்டு நடத்தப்பட்டது. 3,921 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4,035 குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
4.484 லிட்டர் மதுபானம் (23,040 பாட்டில்கள்) 9,987 லிட்டர் கள் 5.145 லிட்டர் ஸ்பிரிட், 14 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. புகையிலை சட்டத்தின் கீழ 580 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 598 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 7,690 கிலோ புகையிலைப் பொருட்கள் மதிப்பு 55.45 லட்சம்) மற்றும் 29 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 19 கடைகள் சீல் செய்யப்பட்டு, 41.75 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் 1119 பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
குற்றவாளிகளுக்குச் சொந்தமான 5 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு லாட்டரி ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ 688 வழக்குகள் பதிவானது லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 723 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனார். 37,189 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஒரு ஆண்டில் 564 செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
