சிங்கமே, போர்வாளே… எஸ் பி வேலுமணிக்கு போஸ்டரில் பில்டப்..!

கோவை நகரில் ரயில்வே ஸ்டேஷன் கலெக்டர் அலுவலகம் உக்கடம் மேம்பாலம் அவிநாசி ரோடு மேம்பாலம் என பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் அதிகரித்து வருகிறது.

மத்திய அமைச்சர் அமித்ஷவுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் எஸ்பி வேலுமணியின் ஆதரவாளர்கள் பல இடங்களில் அவரைப் பற்றி பில்டப் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.

அதிமுகவின் போர்வாள் சிறுபான்மையின மக்களின் போர் குரலே, பகைவர்களே ஓடுங்கள் சிங்கம் இரண்டு வருகின்றன என பல்வேறு வசனங்களுடன் பல போஸ்டர்களை ஒட்டி வைத்துள்ளனர்.

தேர்தல் நெருங்கி வருவதால் பல இடங்களில் இது போல் போஸ்டர்கள் மேலும் அதிகரிக்கும். மாற்று கட்சியினர் ஏட்டிக்கு போட்டியாக போஸ்டர்கள் ஒட்டுவார்கள் . இனி போக போக தான் தெரியும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *