தேர்தல் பேரணிக்காக மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்காக அனைவரும் ஓட்டு போட வேண்டும் என்பதை வலியுறுத்தும் பேரணி இன்று நடத்தப்பட்டது. இந்த பேரணியை துவக்கி வைக்க கோவை மாவட்டத்துக்கான தேர்தல் பார்வையாளர் குல்தீப் நாராயண் வருவார் என தெரிவிக்கப்பட்டது.

இதற்காக கோவை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பல வாகனங்களுடன் காலை முதலே காத்திருந்தனர். ஆனால் அதிகாரி பல மணி நேரம் தாமதமாக மதியத்திற்கு பிறகு வந்தார். ஏன் காத்திருக்க வைக்கிறீர்கள் என மாற்றுத்திறனாளிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

நடத்திட்ட உதவிகள் பெற வேண்டி இருப்பதால் அதிகாரிகள் வரும் வரை காத்திருக்க வேண்டும் என கூறிவிட்டனர். வேறுபாடின்றி கால் கடுக்க காத்திருந்து மாற்றுத்திறனாளிகள் பேரணியில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *