கோவை மாவட்டத்தில் பொங்கல் விழா..

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள், பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை பத்திரப்பதிவு உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

அரிசி மாவில் கோலமிட்டு பொங்கல் வைத்து படையல் போட்டு புத்தாடை அணிந்து அரசு ஊழியர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். கலெக்டர் அலுவலகத்தில் பாடல்களைப் பாடி அரசு ஊழியர்கள் அசத்தினர். கயிறு இழுத்தல் , உறியடித்தல் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் களை கட்டியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *