கோவை மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தாள்-1 க்கான தேர்வு 15.11.2025 சனிக்கிழமை அன்று 15 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இத்தேர்வில் 3890 தேர்வர்கள் எழுதுகின்றனர். தாள்-2 க்கான தேர்வு 16.11.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று 45 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இத்தேர்வில் 12370 தேர்வர்கள் எழுதுகின்றனர். இத்தேர்வு மையங்களில் பள்ளிக்கல்வித்துறை மூலம் 4 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 15 வழித்தட அலுவலர்கள், 60 அலுவலர்கள், 970 அறைக்கண்காணிப்பாளர்கள், 51 சொல்வதை எழுதுபவர்கள், மற்றும் 120 நிலையான படை அலுவலர்கள், நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேர்வினை செம்மையாக நடத்திட தேர்வு மையங்களுக்கான பாதுகாப்பு வசதி, தூய்மை வசதி, போக்குவரத்து வசதி, அவசர மருத்துவ வசதி, மற்றும் தடையற்ற மின்சார வசதி, ஆகியவற்றை நடைமுறைப்படுத்திட மாவட்ட காவல்துறை, கோயம்புத்தூர் மாநகராட்சி, தமிழ்நாடு மின்சார வாரியம், மருத்துவத்துறை, தீயணைப்புத் துறை, மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், ஆகியவற்றுடன் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டு தேர்வுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் தெரிவித்துள்ளார்.
