இன்ஜினியர் சந்திரசேகர் தலைமையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா..!

கோவை வடவள்ளி வி என் ஆர் நகர் , பொம்மனாம்பாளையம், நவாவூர் பிரிவு உள்பட பல்வேறு பகுதிகளில் எம்ஜிஆர் 109 பிறந்தநாள் விழா கோலகாலமாக கொண்டாடப்பட்டது. மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் இன்ஜினியர் சந்திரசேகர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். அவிநாசி ரோட்டில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.

இதில் முன்னாள் அமைச்சர் செம வேலுச்சாமி, எம்எல் ஏ அம்மன் அர்ஜுனன் , கேஆர் ஜெயராம் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் இன்ஜினியர் சந்திரசேகர் கலந்து கொண்டார்.

நூற்றாண்டு கடந்தும் அதிமுகவினர் எம்ஜிஆர் மற்றும் அவரின் நினைவுகளை போற்றி புகழ்ந்தனர். எம்ஜிஆர் பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்பட்டதை கேட்டு பொதுமக்கள் உற்சாகமடைந்தனர்.

இதேபோல் வடவள்ளி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் பொங்கல் விழா கோலாலமாக நடந்தது. இதில் இன்ஜினியர் சந்திரசேகர் கலந்து கொண்டு பல்வேறு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *