சார் எல்லாம் SIR மீட்டிங்கில் இருக்காங்க

கோவை மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு சுருக்கத் திருத்த பணிகள் (SIR) தீவிரமாக நடக்குதாம். தினமும் காலை முதல் இரவு வரை வருவாய்த்துறையினர், உள்ளாட்சி அமைப்பினர் என என பல்வேறு தரப்பு அதிகாரிகள் அலுவலர்கள் ஆய்வு கூட்டம் கள ஆய்வு என தீயா வேலை செஞ்சுட்டு வராங்க. ஆனா தாலுக்கா உள்ளாட்சி அலுவலக வட்டாரங்களில் இதர வேலை எல்லாம் பெண்டிங் போட்டுட்டாங்களாம். குறிப்பா பொது மக்களின் பெட்டிசன்கள் முறையா கவனிக்காம இருக்கிறதா புகார் வந்திருக்கிறது. தேர்தல் கமிஷன் சொன்ன வேலையை சிறப்பா முடிச்சு தர வேண்டியது இருக்கு. அதனால சம்பந்தப்பட்ட அரசு துறை ஆபீசர்கள் இதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறாராங்க. இன்னும் ஒரு மாசத்துக்கு இந்த வேலை தான் நடக்க போகுது. அதுக்கப்புறம் ஒரு மாசத்திற்கு வாக்காளர் பட்டியல் தயாரிக்கிற வேலை நடக்கப் போகுது. ஆக மொத்தம் இந்த வருஷம் ஃபுல்லா வாக்காளர் பட்டியல் வேலை தான்.
பல நாள் அலைஞ்சாலும் வேலை எது நடக்கலையே என பொதுமக்கள் புலம்பி கொண்டிருக்கிறார்கள். பொது மக்களின் புகார்களை விசாரிக்க தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும். தேர்தல் பிரிவுக்கு தனி அலுவலர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *