பத்திரம் பதிவுக்கு பணம் குவியுது..

கோவை வடக்கு மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் இன்று அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓய்வு பெற்ற ஊழியர் சங்கம் பதிவு செய்ய 4 மாதமாக அனுமதி வழங்கவில்லை.

பத்திரப்பதிவில் லஞ்சம் கேட்டு நெருக்கடி தரும் வகையில் இப்படி செய்வதாக ஓய்வு பெற்றவர்கள் புகார் அளித்தனர்.

அரசு போக்குவரத்துக் கழகத்தில் தடையின்மை சான்று கேட்கிறார்கள். பணி ஓய்வு பெற்ற பின்னர் எப்படி அரசு துறையில் தடையின்மை சான்று தருவார்கள். இந்தத் துறையில் லஞ்சம் பெறப்படுகிறது . பணத்தை வாரிக் குவிக்க பத்திரம் பதிவு செய்ய மறுக்கிறார்கள் என அதிரடியாக குற்றச்சாட்டு தெரிவித்தனர். இதனால் பதிவாளர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *