குடிநீர் குழாய் உடைந்து ஊருக்குள் வெள்ளம்
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பிரதான குடிநீர் குழாயில் இன்று உடைப்பு ஏற்பட்டது. உடைந்த குழாயில் இருந்து தண்ணீர் வெள்ளம் போல் தெருக்களில் பாய்ந்தது இது தொடர்பாக அந்தப் பகுதி பொதுமக்கள் குடிநீர் வடிகால் வாரியத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
பில்லூர் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி இருக்கலாம் என தெரியவந்தது. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று குழாய் சீரமைப்பு பணிகளை செய்து வருகின்றனர். குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.
