போதை காளான் ருசித்து கொடூரமாக தாக்கிய கும்பல்..!

கோவை கணபதி பகுதியில் ரோட்டோரம் நேற்று இரவு 5 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர் .திடீரென இந்த வாலிபர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை பிடித்து சரமாரியாக தாக்கினர். ஒருவர் மீது இரும்பு கம்பி மற்றும் கற்களால் தாக்கி ஓடவிட்டு உதைத்தனர்.

தப்பி ஓட முயன்ற அந்த வாலிபரை மடக்கி பிடித்து நடுரோட்டில் தூக்கி வீசினர். இந்த கொடூர காட்சியை பார்த்து அந்த பகுதி மக்கள் பீதியில் உறைந்து போயினர். அந்தப் பகுதியில் வசித்த சிலர் ஓடி வந்து தாக்குதலில் உயிருக்கு போராடிய வாலிபரை மீட்டனர். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கஞ்சா ,போதை காளான், சிந்தடிக் டிரக் பயன்படுத்தி வாலிபர்கள் ரோட்டில் சுற்றிக்கொண்டிருப்பதாகவும் அடிக்கடி மோதிக் கொள்வதாகவும் அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். போதை காளான் ருசித்து இந்த கும்பல் மோதிக்கொண்டதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *