பைன் லிங்க் தொட்டீங்க கெட்டீங்க..!

கோவை கணபதி அருகே உள்ள சங்கனூர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (40). இவரது மொபைல் எண்ணுக்கு சில நாட்களுக்கு முன்பு வாகன போக்குவரத்து விதிமீறல் செய்து உள்ளீர்கள் என்றும் அதற்கு உரிய அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவித்து எஸ்எம்எஸ் மூலம் ஒரு தகவல் வந்துள்ளது. 
மேலும் அபராத தொகை செலுத்த லிங்க் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதில் சென்று அபராத தொகையை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைப் பார்த்த செல்வகுமார் செல்போனில் வந்த அந்த லிங்கை தொட்டுள்ளார். அப்போது உடனடியாக அவரது வங்கி கணக்கில் இருந்து 36 ,100 ரூபாய் பணம்  திருடப்பட்டது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்
  
இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார். சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மோசடி லிங்க்குகளை தொட வேண்டாம் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *