கோவையில் தெர்மோகோல் குடோனில் தீ..! பயங்கர புகையால் மக்கள் தவிப்பு

கோவை பீளமேடு கிரி அம்மன் கோவில் வீதி பகுதியில் காசி விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான குடோனில் இன்று மதியம் திடீரென தீ பிடித்தது. இந்த குடோனில் தெர்மோகோல் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக அந்த பகுதி பொதுமக்கள் கணபதி தீயணைப்பு நிலையம் மற்றும் கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் குடோனில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் நாசமானது. தெர்மாகோல் மற்றும் அட்டை பிளாஸ்டிக் சேமிக்கப்பட்டு வைக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் பெரும் சேதம் ஏற்படவில்லை என்றாலும் தெர்மோகோல் தெரிந்ததால் அந்த பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது.

பொதுமக்கள் மூச்சு திணறலால் அவதிக்கப்பட்டனர். மின் ஒயர் பழுது அல்லது யாராவது பீடி சிகரெட் பற்ற வைத்து தீ வீசியதால் தீப்பிடித்து இருக்கலாம் என தீயணைப்பு துறையினர் கருதுகின்றனர். இது தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *