கோவை மாவட்டத்தில் பூத் கமிட்டி அமைப்பதில் பின் தங்கும் தவெக கட்சி..
கோவை மாவட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என பல்வேறு கட்சியினர் அரசியல் பணிகளை செய்து வருகிறார்கள். ஆனால் தமிழக வெற்றி கழகத்தினர் எந்த அரசியல் வேலையும் செய்யாமல் ஒதுக்கி விட்டார்கள். ஜனநாயகன் படம் வரும் என கட்சி தொண்டர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். படம் ரிலீசாகாத அதிருப்தியில் கட்சியினர் சுணக்கி போய் விட்டார்களாம்.
படம் வந்திருந்தால் விஜய் ரசிகர்கள், தொண்டர்கள் எழுச்சியுடன் வேலை செய்திருப்பார்கள். இப்போது ரொம்ப டல்லாக இருக்கிறார்களாம். என்ன செய்வது என தெரியாமல் பொறுப்பில் இருக்கும் கட்சி நிர்வாகிகள் காத்திருக்கிறார்கள். மாநில தலைமையில் இருந்து மாவட்டங்களுக்கு முறையான உத்தரவு எதுவும் வருவதில்லையாம். ஆனந்த், ஆதவ் அர்ஜூனா தரப்பிலிருந்து வரும் ஆர்டர்களை தான் மாவட்ட நிர்வாகிகள் பின்பற்றுவது வழக்கமாம்.
தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் பூத் கமிட்டி கூட்டம், மாவட்ட அளவிலான உயர் நிலை குழு கூட்டம், தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம். மண்டல அளவிலான கூட்டம் என எதுவும் நடத்தவில்லையாம்.
இந்த விவரங்கள் மாநில தலைமையில் உள்ள நிர்வாகிகளுக்கு கூட தெரியவில்லையாம் மற்ற கட்சியினர் செய்வதை பார்த்து பிட் காப்பி’ அடிக்க கூட தெரியாமல் தவெகவினர் சும்மா இருக்கிறார்களாம்.
இதர கட்சியினர் நட்பு அடிப்படையில் தவெகவினரிடம் இப்படி இருந்த ஓட்டு வாங்க முடியாது, வார்டு வீதி, ஏரியா என பிரிச்சு வேலை செய்யணம், ஓட்டு சும்மா கிடைக்காது சந்தேகம் இருந்தா எங்க கூட வந்து வேலை செய்யறத பாருங்க, போஸ்டர் ஓட்டுங்க, பேனர் வெச்சு, சுவத்துல எழுத்துங்க ” என பாசத்துடன் ஐடியா கொடுத்திருக்கிறார்கள்.
அதற்கு தவெகவினர் “எங்க தலைவர் ஒவ்வொரு வீட்டிலும் விஜய் இருக்கிறார் என சொல்லி இருக்காரு ஒரு வீட்டுக்கு ஒரு வீட்டு கன்பார்ம், பையன் தவெகளிற்கு ஓட்டு போட்டா அப்பா, அம்மாவும் தப்பாமா எங்களுக்கு தான் ஓட்டு போடுவாங்க, “என சொல்லி வர மறுத்து விட்டார்களாம்.
மக்கள் பிரச்னைக்கு புகார் மனு கூட முறையாக எழுதி தர தெரியவில்லையாம். இப்படி இருந்தா எப்படி ஜனங்க ஓட்டு போடுவாங்க, விஜய் கட்சிக்காரங்க எல்கேஜி அளவிற்கு கூட இல்லையே, வார்டு தேர்தலுக்கே வாய் வலிக்க பேசணும், இவுங்க இன்னும் சோசியல் மீடியா டயலாக் போஸ்ட் போட்டு விட்டு சிரிச்சுட்டு இருக்காங்க என மற்ற கட்சிக்காரர்கள் கிண்டல் செய்கிறார்களாம்.
