Skip to content
September 6, 2026
Newsletter
Random News
கோவை மெட்ரோ நியூஸ்

கோவை மெட்ரோ நியூஸ்

  • Home
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • வர்த்தகம்
  • கோவை
  • பிரேக்கிங் நியூஸ்Latest
  • ஆன்மீகம்
  • சினிமா பொழுதுபோக்கு
  • விளையாட்டு
  • பொது

Author Info

Author Name

Find Me On

Trending News

இந்தியா
வீணாக கொட்டி கிடக்கிறது ரேஷன் அரிசி …
இந்தியா
நாறிப்போச்சு உக்கடம் படகு துறை
கோவை
ரேஷன் கடை ஊழியர்கள் கருப்பு டிரஸ் , பேட்ச் அணிந்து எதிர்ப்பு…!
கோவை
கொள்ளையடித்த வீட்டில் 5 நாள் தங்கி ஜாலி…! 6 திருடர்களின் அட்டகாசம்
  • Home
  • கோவை
  • கோவையில் பள்ளி சீருடைகள் தைப்பதில் பல லட்ச ரூபாய் மோசடி..! கலெக்டரிடம் புகார்
  • கோவை

கோவையில் பள்ளி சீருடைகள் தைப்பதில் பல லட்ச ரூபாய் மோசடி..! கலெக்டரிடம் புகார்

K. VFeb 6, 20267 months ago01 mins

கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு குவிந்திருந்த பாதிக்கப்பட்ட பெண்கள்..

கோவை பெண்கள் ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் கூட்டுறவு குடிசை தொழிற்சங்க உறுப்பினர்கள் இன்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை ஏடிடி காலனி, ராமநாதபுரம், மதுக்கரை மற்றும் காரமடை ஆகிய இடங்களில் சங்கத்தின் கிளை உள்ளது. இந்த சங்கத்தில் 500 பெண் உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் தற்போது 100 பேர் மட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். அரசிடமிருந்து பள்ளி சீருடை தைக்க துணிகள் சங்கத்திடம் வழங்கப்பட்டு அதனை நாங்கள் தைத்து கொடுத்தால் எங்களுக்கு கூலி கொடுக்கப்படும்.

ஆனால் இந்த சங்கத்தின் சிறப்பு அலுவலர் சிவக்குமார் மற்றும் அவருக்கு கீழ் பணிபுரியும் அன்னபூரணி, காஞ்சனா தேவி, வித்யா, ரேணுகா தேவி ஆகியோர் எங்களுக்கு ஆர்டர் கொடுக்காமல், அவர்களது உறவினர்களான சவிதா, வளர்மதி, காஞ்சனா தேவி, ராஜாத்தி, அலமேலு, தனலட்சுமி ஆகியோருக்கு மட்டுமே அதிகளவிலான ஆர்டர்களை கொடுக்கின்றனர்.

இதனால் நாங்கள் ஆர்டர் இல்லாமல் பாதிப்படைந்து வருகிறோம். மேலும் எங்களுக்கு முறையான ஊதியம் வழங்காமல் அரசிடம் போலி கணக்கு காட்டி மோசடி செய்து வருகின்றனர்.

நாங்கள் வாங்கும் கூலியில் 25 சதவீதம் மிரட்டி பெற்று கொள்கின்றனர். அதிகாரிகளிடம் புகார் அளித்தால் நடவடிக்கை இல்லை. கோவை மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி அம்பிகாவும் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார். எனவே அம்பிகா, மூத்த அதிகாரிகள் நடராஜ், சிவக்குமார் மற்றும் ஊழியர்கள் வித்யா, ரேணுகா தேவி, காஞ்சனா தேவி மற்றும் அன்னபூரணி ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

கலெக்டரை சந்தித்து இந்த புகார் தொடர்பாக பெண்கள் தெரிவித்தனர். இதைக் கேட்ட கலெக்டர் பவன் குமார் விரைவில் இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சாந்தி மற்றும் சங்க உறுப்பினர்கள் கூறுகையில்,” பள்ளி சீருடைகள் தயாரிப்பு பணியில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் குறிப்பாக வயதான மற்றும் கணவரை இழந்த குடும்ப உதவி இல்லாத பெண்கள் துணி தைத்து வழங்கி வருகிறார்கள். ஆதரவற்ற பின்பு கிடைக்க வேண்டிய ஆர்டர்கள் கார்மெண்ட்ஸ் நிறுவனங்களுக்கு முறைகேடாக வழங்கப்பட்டு வருகிறது.

பல லட்ச ரூபாய் கமிஷன் தொகை பெற்று வருகிறார்கள். கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து துணி தைத்து வழங்கும் பெண்களுக்கு முறையான கூலி வழங்குவதில்லை. பல பெண்கள் இந்த மோசடி அதிகாரிகளால் பாதிக்கப்பட்டு வேலை செய்ய முடியாமல் சென்று விட்டார்கள்.

இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினால் இதன் பின்னணியில் உள்ள மோசடி மற்றும் ஏமாற்றப்பட்ட தொகை விவரங்கள் முழுமையாக தெரியவரும். இதை இப்படியே விட்டால் தொடர்ந்து இதைவிட பெரும் மோசடி நடத்தி விடுவார்கள்,” என்றனர்.

Tagged: #tn school uniform # social welfare department # women complaint in social welfare

Post navigation

Previous: போதைப் பொருள் கடத்திய 4 பேருக்கு 12 ஆண்டு சிறை; கோவை கோர்ட் தீர்ப்பு..!
Next: கோவையில் வரும் 8ம் தேதி குரூப் 2 தேர்வு..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Related News

ரேஷன் கடை ஊழியர்கள் கருப்பு டிரஸ் , பேட்ச் அணிந்து எதிர்ப்பு…!

K. VSep 5, 20261 day ago 0

கொள்ளையடித்த வீட்டில் 5 நாள் தங்கி ஜாலி…! 6 திருடர்களின் அட்டகாசம்

K. VSep 5, 20261 day ago 0

Recent Posts

  • வீணாக கொட்டி கிடக்கிறது ரேஷன் அரிசி …
  • நாறிப்போச்சு உக்கடம் படகு துறை
  • ரேஷன் கடை ஊழியர்கள் கருப்பு டிரஸ் , பேட்ச் அணிந்து எதிர்ப்பு…!
  • கொள்ளையடித்த வீட்டில் 5 நாள் தங்கி ஜாலி…! 6 திருடர்களின் அட்டகாசம்
  • கே.என் நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை…!

Recent Comments

  1. eerlijke wedden sites on கோவை மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் தொடர்பாக தேர்தல் பார்வையாளர்கள் ஆலோசனை…
  2. hockey Wedden Online on கோவை மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் தொடர்பாக தேர்தல் பார்வையாளர்கள் ஆலோசனை…
  3. https://Vkkunststoffen.nl on கோவை மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் தொடர்பாக தேர்தல் பார்வையாளர்கள் ஆலோசனை…
  4. safeitservices.co.uk on கோவை மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் தொடர்பாக தேர்தல் பார்வையாளர்கள் ஆலோசனை…
  5. nieuwe Wedden Eredivisie on கோவை மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் தொடர்பாக தேர்தல் பார்வையாளர்கள் ஆலோசனை…

Categories

  • ஆன்மீகம்
  • இந்தியா
  • கலாச்சாரம்
  • கோவை
  • சினிமா பொழுதுபோக்கு
  • தமிழ்நாடு
  • பிரேக்கிங் நியூஸ்
  • வர்த்தகம்
  • விளையாட்டு

கோவை மெட்ரோ நியூஸ்

என்பது கோவையை மையமாகக் கொண்ட ஒரு பிரபல செய்தி ஊடகம் ஆகும். இது நகரத்தின் சமீபத்திய நிகழ்வுகள், வளர்ச்சி செய்திகள், அரசியல், கல்வி மற்றும் கலாச்சார தகவல்களை பொதுமக்களிடம் விரைவாக கொண்டு செல்கிறது. கோவை மக்களின் குரலாக செயல்படும் இந்த ஊடகம் நம்பகமான தகவல்களை வழங்குகிறது.

For Contact

  • CovaiMetroNews@gmail.com
  • +919043266186


தள இணைப்புகள்

  • Home
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • வர்த்தகம்
  • கோவை
  • பிரேக்கிங் நியூஸ்
  • ஆன்மீகம்
  • சினிமா பொழுதுபோக்கு
  • விளையாட்டு
  • பொது
© 2026 Covaimetronews.in. All Rights Reserved.
Designed & Developed by Codeauratech