கோவை மாவட்டத்தில் 5 ஆண்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு 21.43 கோடி ரூபாய்க்கு உதவி..!
கோவை மாவட்ட ற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மூன்று சக்கர சைக்கிள்கள், குழந்தைகளுக்கான நடைவண்டி, மடக்கு சக்கர நாற்காலி, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் தையல் எந்திரங்கள், காதொலிக் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 21.43 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது. இது குறித்து கலெக்டர் பவன்குமார் கூறுகையில்,”
கோவை மாவட்டத்தில் கடந்த 7.5.2021 ம் தேதி முதல் தற்போது வரை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறு குறு தொழில் வங்கிக்கடன் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 121 பேருக்கு 28.25 லட்ச ரூபாய் வங்கி கடன் உதவியும், அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் 111 பயனாளிகளுக்கு 45 லட்ச ரூபாய் திருமண நிதியுதவியும், மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 80 நபர்களுக்கு 5.50 லட்ச ரூபாய் மதிப்பிலான சக்கர நாற்காலிகளும் வழங்கப்பட்டு உள்ளன. இதுதவிர 619 நபர்களுக்கு 6.25 கோடி ரூபாயில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல்
ஸ்கூட்டர்களும், 608 நபர்களுக்கு 20 லட்ச ரூபாய் மதிப்பில் காதொலி கருவிகளும் பராமரிப்பு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, வாசிப்பாளர் உதவித்தொகை ஆகிய உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 11,915 பயனாளிகளுக்கு 1225 கோடி ரூபாயில் உதவித்தொகை என மொத்தம் 15,541 நபர்களுக்கு 21.43 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது, ” என தெரிவித்தார்
