பாரம்பரிய மருத்துவம் போலியா..? கோவையில் பாரம்பரிய வைத்தியர்கள் போராட்டம்..!

இந்திய பாரம்பரிய வைத்தியத்தை போலி என சொல்வதா, 15 லட்சம் பேர் இந்த தேர்தலில் ஓட்டு போட மாட்டோம் எனக்கூறி சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று இந்திய பாரம்பரிய வைத்தியர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. மூலிகை தாவரங்கள் மற்றும் பல்வேறு சிகிச்சைக்கான மருந்துகளுடன் பாரம்பரிய வைத்தியர்கள் நூதனமாக கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

இதில் சங்க நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன் இளங்கோவன் நாகராஜ் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தின் போது சங்க நிர்வாகிகள் கூறியதாவது;

இந்த நான்கு ஆண்டுகளில் எங்களுக்கு அரசு பதிவு வேண்டும், என்று துணை முதலமைச்சரை 2 முறையும், சுகாதார துரை அமைச்சரை 20 முறைக்கும் மேலாக சந்தித்து, எங்கள் பதிவு பற்றி கேட்டிருக்கிறோம். ஆனால் யாரோடு நிர்பந்தமோ தெரியவில்லை பதிவு தர மறுக்கிறார்கள்.

ஆகவேதான், இந்த முற்றுகை போராட்டம். எங்கள் பரம்பரை மருத்துவத்தை நிறுத்துவதற்கு நீங்கள் யார்? சுகாதார துரை அமைச்சர் எங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்கிறார், அப்படியானால், எங்கள் தாத்தாக்கள் சிலபஸ் உண்டாக்கி அவர்கள் தான் முதன்முதலில் பாளையங்கோட்டையில் சொல்லிக் கொடுத்தார்கள்.

அப்படியென்றால் அவர்களும் (பட்டாதாரிகளும்) ஒன்றுமே தெரியாதவர்களா?.
எங்கள் குலதொழில் எங்களுக்கு கண்டிப்பாக வேண்டும். இதில் தலையிட யாருக்கும் எந்த உரிமையும் இல்லை.

நாங்கள் தலையிடவும் விடமாட்டோம். இந்த தொழிலில் மொத்தம் 3.5 லட்சம் குடும்பங்கள் உள்ளது. 15 லட்சம் வாக்காளர்கள் உள்ளோம், எங்களுக்கு கடந்த முறை தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் இந்திய பாரம்பரிய வைத்தியர்களுக்கு நல வாரியம் அமைத்து தருவேன் என்று வாக்குறுதி அளித்தார்கள்.

இதுவரை அதுவும் செய்யவில்லை, ஆகவே தயவு செய்து முதல்வர் தலையிட்டு, அரசு கொள்கை முடிவெடுத்து
எங்கள் ஜீவாதார உரிமையின்படி, தாசில்தாரர்களை கொண்டு கணக்கெடுத்து சான்று வழங்க வேண்டும்.

அந்த சான்று வைத்து, பாரம்பரிய வைத்தியம் செய்யலாம் என்று அரசு உடனடியாக அரசாணை போட வேண்டும்.

இதோடு முடியாமல், ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த கணக்கு எடுத்து புதிய அனுபவம் பெற்ற எங்கள் வாரிசுகளுக்கும் சான்று கொடுக்க வேண்டும்.

மத்திய அரசு ஏற்கனவே இந்தியா முழுவதும் உள்ள பாரம்பரிய மருத்துவர்களுக்கு டிசி ஹெச்பி என்ற சான்று தகுதியின் அடிப்படையில் தேர்வு நடத்தி தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று வழங்கியிருக்கிறது.

அந்த சான்று பெற்றவர்களுக்கு தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம் மூலம் பி கிளாஸ், அல்லது சி கிளாஸ் பதிவு தர வேண்டும்.

இந்த தேர்தலுக்கு முன் எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் தொடர் போராட்டங்கள், உண்ணாவிரதம் நடத்தி ரேஷன் கார்டு, ஆதார், வாக்காளர் அட்டையையும் ஒப்படைப்போம், எங்களுக்கு ஆதரவாக இருக்கும் கட்சிக்கு ஒட்டுமொத்த ஆதரவும் அளிப்போம், தேவைபட்டால் 15 லட்சம் வாக்குகளையும் போடாமல், தேர்தல் புறக்கணிப்பு செய்யவும் முடிவு செய்துள்ளோம் என்பதை இதன் மூலம் தெரியப்படுத்தி கொள்கிறோம்.

_

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *