கோவையில் தன்னைத்தானே உளியால் செதுக்கும் சிலைதிறப்பு..!

கோவை செஞ்சிலுவை சங்கம் ரவுண்டானா பகுதியில் கோவை மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவன பங்களிப்புடன் தன்னை தானே உளியால் செதுக்கி கொள்ளும் சிலை அமைக்கப்பட்டுள்ளது. முயற்சி முன்னேற்றம் கடும் உழைப்பு போன்றவற்றை குறிக்கும் வகையில் இந்த சிலை உருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

வெண்கலத்தால் உருவாக்கப்பட்ட இந்த அழகிய சிலையை இன்று கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் திறந்து வைத்தார் .இவ்விழாவில் கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கோவை நகரில் தனியார் நிறுவனங்கள் பங்களிப்புடன் ரேஸ் கோர்ஸ் மற்றும் ஸ்மார்ட் சிட்டி பூங்கா பகுதிகளில் மக்களை கவரும் சிலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. காளை மாடு சிலை, குதிரை சிலை உள்பட பல்வேறு சிலைகள் நகர் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கிறது. தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட சிலைகளும் அமைக்கப்பட்டிருக்கிறது . அந்த வகையில் தற்போது தன்னைத்தானே மனிதர் ஒருவர் உளியால் செதுக்கிக் கொள்ளும் சிலை மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *