கோவை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் கோதுமை 2100 டன்னாக அதிகரிப்பு..!
கோவை மாவட்டத்தில் 1405 ரேஷன் கடைகள் உள்ளது. 11.59 லட்சம் ரேஷன்கார்டுதாரர்கள் உள்ளனர். இதில் 11.22 லட்சம் அரிசி கார்டுகள் பயன்பாட்டில் இருக்கிறது. மாவட்ட அளவில், ரேஷன் அரிசி மட்டுமின்றி துவரம்பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் வழங்கப்படுகிறது.
இதர அரசு துறைகளின் பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டேன்டீ நிறுவனத்தின் டீத்தூள், உப்பு மற்றும் சில உணவு பொருட்கள் விற்பனைக்கு இருக்கிறது. ரேஷன் அரிசியுடன், கோதுமை வினியோகம் அதிகரிக்க வேண்டும் என நீண்ட காலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால் கோதுமை சப்ளை வெகு குறைவாகவே இருந்தது. ஒரு கார்டிற்கு ஒரு கிலோ கோதுமை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பற்றாக்குறையால் பலருக்கு கோதுமை கிடைக்காத நிலையிருந்தது. மாதம் 600 முதல் 700 டன் அளவிற்கு கோதுமை ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டது.
கடந்த மாதம் முதல் கோவை மாவட்டத்திற்கு கூடுதலாக கோதுமை ஒதுக்கப்பட்டது. இப்போதுள்ள அளவை விட 3 மடங்கு அதிகமாக மாதம் 2100 டன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை மாவட்ட வழங்கல் அலுவலர் விஸ்வநாதன் கூறுகையில், “கோதுமை நகர் மட்டுமின்றி புறநகர் பகுதி மக்களும் அதிகமாக கேட்கிறார்கள். விலையில்லா உணவாக கோதுமை வழங்கப்படுகிறது.
இதன் மூலமாக அனைத்து கார்டுதாரர்களுக்கும் கோதுமை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. மாவட்ட அளவில் அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் தடையின்றி உரிய கால அவகாசத்தில் வழங்கப்படுகிறது. உணவு தானியங்கள் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது, ” என்றார்.
X
021
021
021
