கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிக்கு விரைவில் 20 நோடல் ஆபிஸர்கள்..!

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக தேர்தல் அலுவலர்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பல்வேறு சிறப்பு பிரிவுகள் ஓட்டு சாவடி அலுவலர்கள் என பல்வேறு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மாவட்ட அளவில் தேர்தல் அலுவலர்களின் கட்டுப்பாட்டில் பணிகள் ஒப்படைக்கப்படும் . குறிப்பாக மாவட்டத்தில் உள்ள முக்கிய தேர்தல் பணிகள் தொடர்பு அலுவலர்கள் என அழைக்கப்படும் நோடல் ஆபீசர் வசம் ஒப்படைக்கப்பட இருக்கிறது .

இதற்காக மாவட்ட அளவில் 20 நோடல் ஆபீசர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் துணை கலெக்டர் அந்தஸ்தில் தேர்வு செய்யப்பட்டு வருகின்றார்கள். ஓட்டு மெஷின் மேலாண்மை,
வாகன போக்குவரத்து , தேர்தல்
பயிற்சி , தேர்தல் நடத்தை விதிகள் ,
தேர்தல் செலவினம்,
ஓட்டு சாவடி, பாதுகாப்பு , போலீஸ் மற்றும் சைபர் செக்யூரிட்டி ,
எஸ்எம்எஸ் கண்காணிப்பு , மீடியா மானிட்டரிங், ஓட்டு பதிவு விழிப்புணர்வு , ஆவணங்கள் மேலாண்மை, தேர்தல் பணிகள்,
தேர்தல் அலுவலர்கள்
போன்றவற்றிற்காக 20 தொடர்பு அலுவலர்கள் நியமனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

மாவட்ட அளவில் இந்த 20 அலுவலர்கள் கட்டுப்பாட்டில் தேர்தலில் முக்கிய பணிகள் ஒப்படைக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *