கோவை சிறையில் கைதி பல்பை உடைத்து தகராறு..!

ஈரோடு மாவட்டம் மாணிக்கம் பாளையம் பகுதியை சேர்ந்த ஆசிப் என்கிற முஸ்தகின் (33 ). இவர் சட்டவிரோத செயல்பாடு காரணமாக கடந்த 2024 ம் ஆண்டு ஈரோடு வடக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டார். கோவை மத்திய சிறையில் இவர் அடைக்கப்பட்டு இருந்தார்.

இவர் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. இந்த நிலையில் கோர்ட்டில் இவரை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆஜர்படுத்த சிறை அலுவலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர் . இவரை நேற்று மதியம் சிறையின் பத்தாவது பிளாக்கில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் அறைக்கு அழைத்துச் சென்றனர் .

அப்போது அவர் விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு தராமல் சிறை வார்டர்களுடன் தகராறு செய்தார். அங்கே இருந்த பல்பை உடைத்து அதை எடுத்து அலுவலர்களை குத்த முயற்சி செய்தார் . அதற்குள் சிறை அலுவலர்கள் அவரை மடக்கி பிடித்தனர் . மேலும் அவர் வழக்கு விசாரணை தொடர்பான எந்த கேள்விக்கும் பதில் சொல்ல மறுத்து தொடர்ந்து சத்தம் போட்டுக் கொண்டே இருந்தார் .

இதைத்தொடர்ந்து அவர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் தரப்பட்டது. போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் . கைதியின் தகராறு சிறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உளளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *