கோவை கேரள எல்லையில் 1305 ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்..

கோவை மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் பாகைகளில் செக்போஸ்ட்டுகள் இருக்கிறது வாளையார் வேலந்தாவளம் சொக்கனூர் கோபநாரி உள்ளிட்ட 13 இடங்களில் செக்போஸ்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.

இது தவிர சில இடங்கள் மாநில எல்லைக்குள் சென்று வரும் பாதைகளாக இருக்கிறது. இந்த பகுதியில் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்கள் கடத்தல் கண்டறிய ரகசிய தகவல்கள் மற்றும் சில நேரங்களில் நடத்தப்படும் சோதனைகளில் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 2022ம் ஆண்டில் கோவை மாவட்டத்தில் மாநில எல்லைப்பகுதியில் நடந்த 5 கிலோ போதை பொருட்கள் சிக்கியது. கடந்த 2023ம் ஆண்டில் 75 கிலோ போதை பொருட்கள், 2024ம் ஆண்டில் 145 கிலோ, 2025ம் ஆண்டில் 951 கிலோ, நடப்பாண்டில் இதுவரை 123 கிலோ என 5 ஆண்டில் 1305 கிலோ எடையில் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் மாநில எல்லைகளில் நடந்த சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக 191 வழக்குகள் பதிவானது. இந்த வழக்கில் 93 பேர் கைது செய்யப்பட்டனர். போதை பொருட்கள் கடத்தல் கடுப்பு பிரிவு போலீசார் வசம் 54 வழக்குகளும், மது விலக்கு அமலாக்க பிரிவில் 120 வழக்குகளும் இதர போலீஸ் ஸ்டேஷன்களில் 17 வழக்குகளும் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது தொடர்பான விவரங்கள் கோவை மற்றும் கேரள மாநில எல்லை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தேர்தல் நேரத்தில் ஊடுருவாமல் தடுக்க ஒருங்கிணைப்பு குழு மற்றும் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க இந்த கூட்டத்தில் உத்தரவு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *