கோவையில் முதியவர் கழுத்து அறுத்து தற்கொலை..!

கோவை அடுத்து உள்ள கோவைப்புதூர் குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் சோமுராஜ் (77). இவருக்கு புற்று நோய் பாதிப்பு இருந்தது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனாலும் நோய் குணமாகவில்லை. சோமுராஜ் வலி தாங்க முடியாமல் தற்கொலை செய்ய முடிவு செய்தார். இந்நிலையில், கடந்த 18ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

அப்போது அதற்கு பயன்படுத்திய கயிறு அறுந்து விட்டது. அதன் பிறகு, சமையல் அறைக்கு சென்ற சோமுராஜ் அங்கு இருந்த கத்தியை எடுத்து கழுத்தை அவரே அறுத்துக் கொண்டார். வெளியில் சென்றிருந்த அவரது மனைவி வீட்டிற்குள் வந்து பார்த்தபோது ரத்தம் சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அப்போதுதான், சோமுராஜ் கழுத்தை அறுத்துக் கொண்டது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி உடனடியாக மகன் கோபாலகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பிறகு சோமுராஜை அவர்கள் அங்கு உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த சோமுராஜ் உயிரிழந்தார். இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *