சட்டமன்ற தேர்தலில் முறைகேடு: ‘ஆப்’ மூலமாக புகார் பெற உத்தரவு..
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள். உதவி அலுவலர்கள். பயிற்றுநர்களுக்கான ஆலோசனை மற்றம் பயிற்சி வகுப்பு இன்று நடந்தது.
இதில் இந்திய தேர்தல் கமிஷன் டெக்னிக்கல் திட்ட இயக்குநர் சவுரவ் ராய் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக புரஜக்டரில் பயிற்சி வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: தேர்தல் ஆணையத்தின் மூலமாக இஎஸ்எம்எஸ், சுவிதா, சி. விஜில், இசிஐ நெட் வோட்டார் போன்ற செயலிகள் பயன்பாட்டில் இருக்கிறது.
இசிஐ நெட் 40க்கும் மேற்பட்ட பல்வேறு தேர்தல் செயலிகளை ஒருங்கிணைத்து கூடுதல் தகவல்களை தரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த செயலிகள் மூலமாக பொதுமக்கள் பலவேறு புகார்களை தரலாம் . இஎஸ்எம்எஸ் மூலமாக தேர்தல் செலவு கணக்கு விவரங்களை மக்கள் அனுப்பலாம். மக்களின் புகார்களை செயலி மூலமாக பெற்று அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்கலாம். கடந்த காலங்களை போல் தவறு செய்தவர்கள், ஓட்டுக்கு பணம் தந்தவர்கள் தப்பி செல்ல முடியாது,
மக்கள் தங்களிடம் உள்ள ஆதாரங்களை இந்த செயலிக்கு அனுப்பினால் அதன் பேரில் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். எனவே அதிகாரிகளும், தவறுக்கு துணை போக முடியாது மக்கள் தங்கள் வசம் உள்ள ஆதாரங்களை அனுப்பினால் அதிகாரிகளும் மாட்டி நேரிடும். எனவே பொதுமக்கள் இந்த தேர்தலில் பிரதானமான புகார்தாரர்களாக இருப்பார்கள்.
ஓட்டு சாவடி விவரங்களை அறிய செயலியை பயன்படுத்தலாம். வோட்டார் ஹெல்ப் லைன் ஆப் மூலமாக பதிவு திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்யலாம். சி விஜில் செயலி மூலமாக நடத்தை விதிகள் மீறல் தவறுகளை போட்டோ, வீடியோ ஆதாரங்களாக பெற முடியும்.
வேட்பாளர்கள் தொடர்பான முழு விவரங்கள், அவரின் குற்ற பின்னணி வழக்கு விவரங்களையும் அறிய கேஒய்சி வசதி இருக்கிறது. வாக்காளர் வருகை விவரங்களை அறிய வோட்டர் டர்ன் அவுட் செயலி இருக்கிறது.
இந்த செயலிகளை தேர்தல் அலுவலர்கள் பயன்படுத்த வேண்டும். ஒட்டு பதிவு நாளில் ஓட்டு சதவீதம் பதிவிற்கு இந்த செயலிகள் உதவி கரமாக இருக்கும். எனவே தொழில் நுட்ப வசதிகளை, திட்டங்களை நுணுக்கமாக அறிந்து பூத் லெவல் ஆபீசர் மற்றும் இதர பிரிவினருக்கு தகவல் பகிரலாம்.
வரும் சட்டமன்ற தேர்தல் சவாலானது. அனைத்து மக்களையும், தவறுகளையும் தடுக்க இந்த செயலிகள் மிக உதவிகரமாக இருக்கும். தவறு செய்தவர்களை ஆதாரத்துடன் பிடிக்க இந்த செயலி விவரங்கள் உதவி செய்யும்.
இவ்வாறு அவர் பேசினார். இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், ஆர்டீஒக்கள் ராமகிருஷ்ணன் மாருதி பிரியா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
