கோவையில் தோட்டக்கலையில் 9105 பேருக்கு மானியம்
கோவை மாவட்டத்தில் சின்னத்தடாகத்தில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் பசுமை குடிலில் ஜெர்பரா மலர் சாகுபடி நடக்கிறது. இதனை கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் இன்று ஆய்வு செய்தார்
. தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ், 40 சதவித மானியத்தில் தோட்டக்கனை’ பாயிர்கள் பரப்பு அதிகரித்தல், வாழைத்தார் பாதுகாப்பு உறை வழங்குதல், பழைய தோட்டங்களை புதுப்பித்தல், 50 சதவீத மானியத்தில் நீர் சேமிப்பு கட்டமைப்பு, பசுமைக்குடில் அமைத்தல்
, நிழல் வலை கூடாரம், நிலப்போர்வை அமைத்தல், ஒருங்கிணைந்த உரம் மற்றும் பயிர் பாதுகாப்பு மேலாண்மை தரம் பிரித்து சிப்பம் கட்டும் அறை, வெங்காய சேமிப்புக் கிடங்கு நடமாடும் விற்பனை ஊர்தி ஆகிய அறுவடை பின் செய் நேர்த்தி இனங்கள், மகரந்தச் சேர்க்கையை ஊக்குவிக்க தேனீ பெட்டிகள் தேனீ காலனிகள், தேன் எடுக்கும் இயந்திரங்கள் வழங்குதல் மற்றும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க மானியம் வழங்குதல் என கடந்த 5 ஆண்டுகளில் 15.38 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களின் மூலமாக 9105 பேர் பயனடைந்துள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பசுமைக்குடில் சாகுபடி என்பது கட்டுப்படுத்தப்பட்ட சூழவில் பயிர்களை வளர்ப்பது. இதனால் பல முக்கிய நன்மைகள் கிடைக்கின்றன வெளி நிலத்தைவிட 1-5 மடங்குவரை அதிக விளைச்சல் கிடைக்கும். வருடம் முழுவதும் மழை வெயில் குளிர்போன்ற காலநிலை மாற்றங்கள் பாதிக்காது வண்ணம் சாகுபடி செய்து உயர்தரமான ஒரே அளவு, நல்லநிறம், தரம் கொண்ட காய்கறி, மலர்கள் விளை பொருட்கள் கிடைக்கும்.
வெளி சூழலிலிருந்து பாதுகாப்பு இருப்பதால் நோய் மற்றும் பூச்சிகள் தாக்கம் குறையும். கட்டுப்பாடு உள்ள சொட்டுநீர் பாசனம் மூலம் 40-50 சதவீதம் வரை நீர் மற்றும் உரம் சேமிப்பு செய்யலாம். குடைமிளகாய், தக்காளி, வெள்ளரிக்காய் ஜெர்பேரா போன்ற உயர் மதிப்பு பயிர்கள் மூலம் நல்ல லாபமும், அதிக வருமானமும் கிடைக்கும் .
தரமான உற்பத்தி காரணமாக ஏற்றுமதிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. தோட்டக்கலைத் துறையின் மூலம் பசுமை குடில் அமைப்பதற்கு 50% மானியமாக வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இத்திட்டத்தின் மூலம் 32,000 ச.மீ மற்றும் ரூ.153 கோடி மதிப்பீட்டில் பசுமை குடில் அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது
